states

img

கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக பரூக் அப்துல்லா அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரில், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா (85 வயது) உடல்நலக் குறைவு காரணமாக தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கடந்த 15-ஆம் தேதி அக்கட்சியின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்சனைகள் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
வரும் டிசம்பர் 5-ஆம் தேதி, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை பரூக் அப்துல்லா தலைவராக செயல்படுவார்.