ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா மீது முறைகேடு வழக்கு பதிய அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா அம்மாநில கிரிக்கெட் சங்கத்தில் நிதி முறைகேடு செய்ததாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பண மோசடி தொடர்பாக ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறிபிட்டு குற்றப்பத்திரிகையை ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் கடந்த மாதம் ரத்து செய்து உத்தரவிட்டது. ஜம்மு காஷ்மீரில் வரும் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகள் மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா மீது முறைகேடு வழக்குப் பதிவு செய்ய அனுமதி கோரி ஸ்ரீநகர் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில் சட்ட விரோதமாக சம்பாதித்த பணத்தில் சொத்து சேர்த்தல் மற்றும் சொத்தை மறைத்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரியுள்ளது.