states

img

இமாச்சலில் பாஜக படுதோல்வி!

இமாச்சலப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் 39 இடங்களில் பெரும்பான்மையில் வெற்றி பெற்று, பாஜகவிடமிருந்து ஆட்சியை  கைப்பற்றுகிறது. 
இமாச்சலப்பிரதேசத்தின் 68 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் சுமார் 75.6% வாக்குகள் பதிவாகின. தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்பட்டது. இதில் காங்கிரஸ், 39 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றுள்ளது. பாஜக 18 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், பாஜகவிடமிருந்து ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது. இதற்கிடையில், பாஜக ஆட்சியில் அம்மாநில முதல்வராக இருந்த ஜெய்ராம் தாக்கூர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.