இமாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர், 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
ரெக்காங் பியோ - சிம்லா நெடுஞ்சாலையில் கின்னூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு லாரி, அரசுப் பேருந்து மற்றும் பல வாகனங்கள் சிக்கிக் கொண்டன. இந்நிலையில், வாகனங்களிலிருந்த 60 பேர் வரை இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சப்பட்ட நிலையில், காவல்துறை, தேசியப் பேரிடர் மீட்புப்படை வீரர்கள் உடனடியாக அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக அம்மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்புப் படையினர் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து மண் சரிந்ததாலும், கற்கள் உருண்டு விழுந்ததாலும் மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. மண்சரிவு நின்றதையடுத்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.