states

img

ஹரியானாவில் இன்று வாக்குப்பதிவு

சண்டிகர், அக். 4 - ஹரியானா மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (அக். 5) நடைபெறுகிறது. காலை 7  மணிக்குத் துவங்கி மாலை  6 மணி வரை நடைபெற உள்ள இந்த தேர்தலில் 2 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்க உள்ளனர். 

இவர்களுக்காக 20  ஆயிரத்து 629 வாக்குச் சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. 90 தொகுதி களில், 1031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர் களில் 101 பேர் பெண்கள். ஹரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ள நிலையில், இந்த முறை அது படுதோல்வியைச் சந்திக்கும் என்று  ஏற் கெனவே கருத்துக்கணிப்பு கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.