4 பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்
வட மாநிலங்களில் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் குழந்தை திருமணம் மிக முக்கிய நிகழ்வாக உள்ளது. 8 அல்லது 10ஆம் வகுப்பு முடித்தவுடன் மாணவி களை திருமணம் செய்து வைக்கும் வழக்கம் உள்ளது. இதனால் சிறுமிகள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியாமலேயே வாழ்ந்து வருகின்றனர். இல்லையெனில் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இந்நிலையில், பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் சிகார் மாவட்டத்தின் பல்வாஸ் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் கிரண். 30 வயது இருக்கும். மிக இளம் வயதிலேயே திரு மணம் செய்து கொண்டவர். இவருக்கு திருமணமாகி சுமித் (17), ஆயுஷ் (4), ஆவேஷ் (3) என 3 மகன்களும், சினேகா (13) என்ற மகளும் என மொத்தம் 4 பிள்ளை கள் உள்ளனர். இந்நிலையில், குடும்ப பிரச்சனை கார ணமாக தனியாக வசித்து வரும் கிரண் கடந்த சில நாட்களாக அவரது பிள்ளை களுடன் வீட்டை விட்டு வெளியே வர வில்லை. அவரது வீடு பூட்டியே கிடந்தது. வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அண்டை வீட்டார் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல்துறை வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டில் கிரண் மற்றும் அவரது 4 பிள்ளைகளும் சடலமாக கிடந்தனர். கிரணும் அவரது 4 பிள்ளைகளும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதையடுத்து 5 பேரின் உடல்களையும் மீட்ட காவல்துறை உடற்கூராய்வு பரி சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.