states

img

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தின், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலைக்கு அரு கில் உள்ள நர்சூ சந்தையில் ஞாயிறன்று காலை 11:30 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி புதி தாக திறக்கப்பட்ட உணவகம், கடை கள் சேதமடைந்தன. நிலச்சரிவை முன்  கூட்டியே கணித்து சந்தைப் பகுதியில்  இருந்த அனைத்துக் கட்டிடங்களில்  இருந்தவர்களும் வெளியேற்றப்பட்ட தால், எந்தவிதமான உயிரிழப்பும் ஏற்பட வில்லை. பொருட்சேதம் மட்டுமே நிகழ்ந்தது என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். நிலச்சரிவை தொடர்ந்து மீட்புப்படையினர், காவல்துறை மற்றும்  உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு  விரைந்து மீட்புப் பணிகளை மேற் கொண்டு வருகின்றனர். போர்க்கால அடிப்  படையில் மீட்புப் பணிகள் நடந்து வரு வதாக உதம்பூர் மாவட்ட நிர்வாகம் தெரி வித்துள்ளது.