states

img

பீகார் தேர்தலில் 4 இடங்களிலும் வெற்றி பெறுவோம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்பிக்கை

பீகார் தேர்தலில் 4 இடங்களிலும் வெற்றி பெறுவோம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்பிக்கை

பாட்னா பீகார் சட்டமன்றத் தேர்தலில் “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விபூதிப்பூர், மஞ்ஹி, கயாஹாட், பிப்ரா ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  விபூதிப்பூர் மற்றும் மஞ்ஹி யில் உள்ள தற்போதைய எம்எல் ஏக்களான அஜய் குமார் மற்றும் டாக்டர் சத்யேந்திர யாதவ் ஆகி யோர் மக்களிடையே பிரபலமான வர்கள். கயாஹாட் வேட்பாளர் ஷியாம் பாரதியும் இரண்டாம் கட்டத்தில் மக்கள் தீர்ப்பைக் கோரும் பிப்ரா தொகுதி வேட்பா ளர் ராஜ்மங்கல் பிரசாத் ஆகி யோர் போராட்டங்கள் மூலம் மக்க ளின் இதயங்களில் இடம் பிடித்துள் ளனர். தற்போதைய எம்எல்ஏக்களின் செயல்பாடுகளை பட்டியலிட்டு முன்னேற்ற அட்டைகளாக (புராக் ரஸ் கார்டு) விபூதிபூர் மற்றும் மாஞ்சி யில் வெளியிடப்பட்டன. எம்எல்ஏ நிதியில் உள்ள தொகையை விட அதிகமாக செலவு செய்து இரு தொகுதிகளிலும் வளர்ச்சியை ஏற் படுத்த முடிந்தது. 4 தொகுதிக ளிலும் சிபிஎம் வலுவான பிரச்சா ரத்தை மேற்கொண்டு வருகிறது. பிரச்சார நடவடிக்கைகளை மேற் பார்வையிட அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் ஏ.விஜயராக வன் மற்றும் டாக்டர் அசோக் தாவ்லே பல முறை பீகாருக்குச் சென்றுள்ளனர். வரும் நாட்களில் மூத்த தலை வர்கள் பிருந்தா காரத், சுபாஷினி அலி மற்றும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் முகமது சலீம் உள்ளிட்ட பலர் பிரச்சாரத்தில் ஈடு பட உள்ளனர். சிபிஎம் மாநிலச் செயலாளர் லாலன் சவுத்ரி கயா ஹாட்டில்  முகாமிட்டுள்ளார். மேலும் மாநில செயற்குழு உறுப்பி னர்கள் பல்வேறு தொகுதிகளில் தங்கி தேர்தல் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கின்றனர்.  இத்தகைய சூழலில்,”நாங்கள் போட்டியிடும் நான்கு இடங்களி லும் மக்களிடமிருந்து எங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கிறது. நான்கு இடங்களிலும் வெற்றி பெறும் நம்பிக்கை உள்ளது”என்று சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் அவதேஷ் குமார் நம்பிக்கை தெரிவித்தார்.