states

img

பீகாரில் கோரச் சம்பவம் சாத் பண்டிகை கொண்டாட்டத்தில் நீரில் மூழ்கி 100 பேர் பலி

பீகாரில் கோரச் சம்பவம் சாத் பண்டிகை கொண்டாட்டத்தில் நீரில் மூழ்கி 100 பேர் பலி?

பாட்னா நாட்டில் பீகார் உள்ளிட்ட கிழக்குப் பகுதி மாநிலங்களில் சாத் பண்டிகை பிரசித்தி பெற்றதாகும். நீர் நிலை களில் சூரியனை வணங்கும் இப்பண்டிகை வட மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. 2025ஆம் ஆண்டு சாத் பண்டிகை அக்., 25 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்நிலையில், பீகார் மாநிலத்தில் சாத் பண்டிகை கொண்டாட்டத்தின் போது நீர்நிலைகளில் மூழ்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என செய்திகள் வெளியா கியுள்ளன. புதன்கிழமை இரவு நிலவரப்படி அம்மாநிலத்தில் சுமார் 83 உடல்கள் கைப்பற்றப்பட்டன என்று கூறப்படுகிறது. அதிகபட்சமாக தெற்கு பீகாரில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல கோசி-சீமாஞ்சல் மற்றும் கிழக்கு பீகாரில் 30 பேரும்,  வடக்கு பீகாரில் 19 பேரும், பாட்னா மாவட் டத்தில் மட்டும் 9 பேர் உட்பட கங்கை ஆற்றில் நீராடிய 15 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள் ளனர். நீர்நிலைகளில் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளாததால் இந்த மோசமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளி யாகியுள்ளன.  அதிர்ச்சியில் மாரடைப்பு  பீகார் தலைநகர் பாட்னாவுக்கு அருகிலுள்ள பாத்ரூர் கிராமத்தில் கங்கை ஆற்றில் நீராடிய ராக்கி பாஸ்வான் என்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்தச் செய்தியைக் கேட்ட அதிர்ச்சியில், அவரது சகோதரி சப்னா குமாரி என்பவரும் மாரடைப்பால்  மரணமடைந்தார். பலி எண்ணிக்கையை  மறைத்த பாஜக கூட்டணி அரசு பீகார் மாநிலத்தில் சாத் பண்டிகை கொண் டாட்டத்தின் போது உயிரிழப்பு வழக்கமானது தான். ஆனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் இம்முறை 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சட்டமன்றத் தேர்தல் இருப்பதால் ஆளும் பாஜக கூட்டணி அரசு பலி எண்ணிக்கையை மறைத்துள்ளது என  உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத னால் சாத் பண்டிகை சோகத்தைநோக்கி நகர்ந்து வருகிறது.

மோடிக்கு மட்டும் மினரல் வாட்டர் தொட்டியுடன் பாதுகாப்பு

பீகாரில் சாத் பண்டிகை பிரசித்தி பெற்றது என்பதால் அம்மாநிலத்தில் நடைபெறும் சட்ட மன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு விளம்பரம் தேட தில்லி யமுனை நதியில் பிரதமர் மோடி சூரிய வழிபாடு நடத்த தற்காலிகக் குளம் அமைக்கப்பட்டது. தற்போதைய  யமுனை நதி மாசடைந்த நிலையில் கருப்பு நிறமாக பாய்ந்து வரு கிறது. அதாவது சாக்கடையை விட மோசமான நிலையில் உள்ளது.  மக்கள் யமுனை நீரை கைகளால் தொடக் கூட அஞ்சி வருகின்ற னர். ஆனால் மோடிக்காக அமைக்கப்பட்ட செயற்கை குளத்தில்  யமுனை நதி நீருக்கு பதிலாக மினரல் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. ஆளும் தில்லி பாஜக அரசு மோடிக்காக மக்கள் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளது. ஆனால் பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்தில் மக்களுக்காக  சாதாரண பாதுகாப்பு கூட வழங்கவில்லை. இதுதான் பாஜகவின் மக்கள் நலன் என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.