தோழர் பி.ராமச்சந்திரன் நூற்றாண்டு: சிபிஎம் மரியாதை
தருமபுரி, அக்.30- தோழர் பி.ராமச்சந்திரன்-னின் நூற்றாண்டு விழா முன்னிட்டு, தரும புரியில் அவரது உருவப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் மலர்தூவி மரியாதை செலுத்தி னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் முதல் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் வரை திறம்பட செயல்பட்ட தோழர் பி.ராமச்சந்திரன்-னின் நூற் றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தரும புரியில் அவரது உருவப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் மலர்தூவி மரியாதை செலுத்தி னர். செங்கொடிபுரத்தில் வியாழ னன்று நடைபெற்ற இந்நிகழ்விற்கு, கட்சியின் ஒன்றியச் செயலாளர் கோவிந்தசாமி தலைமை வகித் தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, அருச்சுனன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, பாப் பிரெட்டிபட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா, வட்டச் செயலாளர் தி.வ.தனுசன் மற்றும் டி.சேகர் ஆகியோர் பங்கேற்றனர். பாலக்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டச் செயலாளர் பி. காரல் மார்க்ஸ், விவசாயத் தொழி லாளர் சங்க வட்டத் தலைவர் ஜி. பாண்டியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் சிறை தியாகிகள் நினைவகத்தில் நடைபெற்ற பி.ஆர்.சி நூற்றாண்டு துவக்கவிழா விற்கு அலுவலக செயலாளர் பி. சந் திரன் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எ.குமார், மூத்த தோழர் ஆர்.வெங்கடபதி, சந்திரன் மற்றும் அமைப்புக்குழு உறுப்பினர்கள் ஏ.முருகேசன், எஸ். பவித்ரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முன்னதாக பிஆர்சி உருவப்படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.
