பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
கடலூர், அக்.31- கடலூரில் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமையில் வெள்ளியன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாநில துணைச் செயலாளர் கோ.மாதவன் பயிர் இன்சூரன்ஸ் தொகையை தாமதம் இன்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். அவர்தம் உரையில், கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட சிதம்பரம், காட்டுமன்னார்குடி, விவ சாயிகளுக்கு நெல், உளுந்து பயிரிட்ட விவ சாயிகளுக்கும், மங்களூர், நல்லூர் பகுதியில் மக்காச் சோளம் பயிரிட்ட விவசாயி களுக்கும், பயிர் காப்பீடு தொகை தாமதம் இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜன் வாய்க்காலில் இருந்து கான்சாகிப் வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்ய வேண்டும். உப்பனாற்றின் வழியாக சாலியான் தோப்பு உள்ளிட்ட கிராமங்களில் மழை நீரால் பயிர்கள் பாதிக்கப்படுகின்றது. வாய்க்காலில் உள்ள ஆகா யத்தாமரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மாவட்டம் முழுவதும் யூரியா, உரம் தட்டுப்பாடு நிலவு கிறது. அனைத்து வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் தட்டுப்பாடு இன்றி கிடைக்க ஏற்பாடு செய்திட வேண்டும். காட்டுமன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் தனியார் கடைகளில் யூரியாவில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கும் நிலை உள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிள்ளை உள்ளிட்ட டெல்டா பகுதியில் நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் தொடர்மழை யால் முளைத்த நெல் பயிர் கள் அழிந்துவிட்டது. மீண்டும் நேரடி நெல் விதைப்பு பணிகளை செய்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பரங்கிப்பேட்டை வி.பஞ்சாங்குப்பம் கிரா மத்தில் ஐஎப்எஸ்எல் நிறு வனத்திற்கு பொருட்களை ஏற்றி செல்ல ரயில் பாதை அமைத்ததால் மழைக் காலங்களில் தண்ணீர் விவ சாய நிலங்களில் தேங்கி நிற்கிறது. வி.பஞ்சகுப்பம், ஆண்டிகுழி, கிராமங்களில் 500 ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்படுகிறது இதற்கு வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என பேசினார். இந்த கூட்டத்தில் ஏராள மான விவசாயிகளுக்கு வந்து கொண்டு பல்வேறு கோரிக்கை குறித்து பேசி னார்கள். இதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் கோரிக்கை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு அறி வுறுத்தினார்.
