சேத்தியாதோப்பில் மழையால் நெல் மூட்டைகள் நாசமானது விவசாயிகள் வேதனை
சிதம்பரம், அக்.31- சேத்தியாத்தோப்பு பகுதியில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையால் நாற்று மூட்டைகளாக மாறி யுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி உள்ளிட்ட வட்டப்பகுதி களில் உள்ள விவசாயிக ளிடம் கொள்முதல் செய்யப் பட்ட நெல் மூட்டைகளை சேத்தியாத்தோப்பு எம் ஆர் கே கூட்டுறவு சர்க்கரை ஆலையின் வளாகத்தில் அரசு சேகரித்து வைத்து ள்ளது. இதில் சுமார் 7500 மெட்ரிக் டன் அளவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மூட்டைகளை தார்பாய் கொண்டு மூடி வைத்துள்ள னர். இதில் சில தார் பாய்கள் கிழிந்து இருந்தால் சிதம்பரம் மற்றும் புவனகிரி சுற்றுவட்டார பகுதியில் தீபாவளி நேரத்தில் தொடர்ந்து 4 நாட்கள் மழை பெய்தால் தார்பாய் ஓட்டையின் வழியாக மழை நீர் ஒழுகி நெல் மூட்டைகள் வீணானது. மழை நீரில் நனைந்த நெல் மூட்டைகளில் நெற்பயிர் முளைத்துள்ளது. இதனை பார்த்து விவ சாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தற்போது முளைத்துள்ள நெல்மூட்டை களால் விவசாயிகளுக்கு நஷ்டம் இல்லை என்றாலும் எவ்வளவு பணம் கொடுத் தாலும் உடனடியாக ஒரு மூட்டை நெல்லை உற்பத்தி செய்ய முடியுமா? விவ சாயிகள் அரும்பாடுபட்டு விவசாயம் செய்த நெல்லை மக்களின் உணவுக்கு சரியான முறையில் பாது காப்பு செய்யாமல் அரசு அதிகாரிகள் அலட்சியமாக இருந்துள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் பல இடங்களில் விவசாயிக ளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் தானிய வகைகளை பத்திரபடுத்தி வைப்பதற்கு நிரந்தர பாது காப்பான குடோன்கள் இல்லை. பல இடங்களில் திறந்த வெளியில் தார்பாய் போட்டு தான் மூடி வைத்துள்ளனர். இத னால் ஒவ்வொரு மழை நேரத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அரசு ஒவ்வொரு வட்டத்திலும் கொள்முதல் செய்யப்படும் தானியங்களை பாதுகாக்க நிரந்தர குடோன்களை அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
