states

img

‘வாக்காளர்களை  நீக்குவது மோசமான பின்விளைவை ஏற்படுத்தும்’ சரத்பவார் எச்சரிக்கை

‘வாக்காளர்களை  நீக்குவது மோசமான பின்விளைவை ஏற்படுத்தும்’ சரத்பவார் எச்சரிக்கை

வாக்காளர்களை நீக்குவது, சேர்ப்பது மோசமான பி ன்விளைவை ஏற்ப டுத்தும் என தேர்தல் ஆணையத்திற்கு தேசியவாத காங் கிரஸ் தலைவர் சரத் பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறு வனத்துக்கு அவர் அளித்த நேர் காணலில் (பீகார் எஸ்ஐஆர் தொடர்பாக),”தேர்தல் ஆணையம் என்ன செய்தாலும் உண்மைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். அதே போல விரிவான தகவல்கள் சேக ரிக்கப்பட வேண்டும். ஆனால், வாக்கா ளர் பட்டியலில் பெயர்கள் தன்னிச்சை யாக சேர்க்கப்படுவது அல்லது நீக்கப்படு வது, தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை உரு வாக்குகிறது. இதனை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் விளைவுகள் நல்லதல்ல ; மோசமான பின்விளைவை ஏற்படுத்தும். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை நோக்கி சில கேள்விகளை எழுப்பி யுள்ளார். அது தேர்தல் ஆணையம் செயல்படும் விதத்தை கேள்விக்குள்ளாக் கியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியும் நாடாளுமன்ற அமைப்பில் ஒருவர் தான். அவர் கேள்வி கேட்கக் கூடாது என்று கூற முடியாது. ஆகையால், அவரின் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு தேர்தல் ஆணை யத்தின் சார்பாக பாஜக தலைவர்க ளும், பாஜக ஆளும் மாநில முதல மைச்சர்களும் பதிலளித்துக் கொண்டுள் ளனர். இது தேர்தல் ஆணையத்தால் கட்டமைக்கப்பட வேண்டிய நம்பிக்கை, குறைமதிப்புக்கு உட்படுத்தப்படுகிறது. இது நல்லதல்ல” என அவர் கூறினார்.