states

img

கேரளத்திற்கு நன்றி தெரிவித்த பாலஸ்தீன தூதர்

கேரளத்திற்கு நன்றி தெரிவித்த பாலஸ்தீன தூதர்

பாலஸ்தீனத்துக்கான இந்தியத் தூதர் அப்துல்லா அபு ஷாவேஷ் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஏ.கே.ஜி மையத்திற்கு சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை சந்தித்தார். பாலஸ்தீன மக்களுக்கு சிபிஎம் தெரிவித்த ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுக்கு அப்துல்லா நன்றியை தெரிவித்தார். இந்த சந்திப்பில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர்கள் தாமஸ் ஐசக், பி.ராஜீவ், புத்தலத்து தினேஷன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் மற்றும் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, அப்துல்லா அபு ஷாவேஷ் தூதர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்தார். அப்போது,”காசாவில் நடந்து வரும் இனப் படுகொலையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையுடன், கேரள மக்கள் பாலஸ்தீன மக்களுக்கு துளியும் குன்றாத ஒத்துழைப்பும் ஆதரவும் தெரிவிப்போம்” என பினராயி விஜயன்   அப்துல்லாவிடம் உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.