அந்தமான் - நிகோபார் தீவுகளிலும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு ; தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
போர்ட் பிளேர் பீகாரைப் போன்று அந்தமான் அந்தமான் & நிகோபார் தீவுகளிலும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த வாக்காளர் திருத்ததிற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக சிபிஎம் அந்தமான் & நிகோபார் யூனியன் பிரதேச செயலாளர் டி.அய்யப்பன், முதன்மை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,“வாக்காளர் பட்டியலில் திருத்தம் என்றால், முன்பு வீடு வீடாக சென்று திருத்தம் மேற்கொள்ளப்படும். இந்த திருத்தத்தின் போது வருகை தரும் தேர்தல் அதிகாரிகளிடம், வாக்காளர்கள் தங்கள் பெயர் மற்றும் பிற விவரங்களைத் தெரிவிப்பார்கள். இதுதான் நடைமுறை. ஆனால் இதற்கு மாறாக தற்போது (2025 முதல்) சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் ஒரு சிக்கலான நடைமுறையாக கொண்டு வரப் பட்டுள்ளது. இந்த நடைமுறை மக்களுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்தும். அந்தமான் வாக்காளர் நீக்க சதி இந்த புதிய திருத்தத்தின் படி, 18 வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனும் தேர்தல் அதி காரிகள் வழங்கும் ஒரு படிவத்தை (கணக்கெ டுப்பு படிவம்) பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் பிறப்பிடம்/பிறந்த தேதி ஆவணங்களை சமர்ப் பிக்க வேண்டும். குறிப்பாக 1.7.1987 முதல் 2.12.2004 வரை பிறந்தவர்கள், பிறப்பிடம்/பிறந்த தேதி ஆவணங்களுடன், தந்தை அல்லது தாயின் பிறப்பிடம்/பிறந்த தேதி ஆவணங்களை யும் வழங்க வேண்டும். அதே போல 2.12.2004-க்குப் பிறகு பிறந்தவர்கள் பிறப்பிடம்/பிறந்த தேதி ஆவணங்களுடன், தந்தை மற்றும் தாய் இருவரின் பிறப்பிடம்/பிறந்த தேதி ஆவ ணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட நடைமுறை அறிமுகப் படுத்தப்படுவதால் குடிமக்கள், குறிப்பாக 1987-க்குப் பிறகு பிறந்தவர்கள், பெற்றோரின் பிறந்த தேதி/பிறப்பிட ஆவணங்களை வழங்குவ தில் கடும் சிரமத்தை எதிர்கொள்வார்கள். மிக முக்கியமாக இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணி நிறைவடைய ஒரு மாத காலமே வழங்கப் பட்டுள்ளதால், பல்வேறு நோக்கங்களுக்காக இந்தியாவின் மற்ற நகரங்கள், வெளிநாடுக ளுக்கு சென்றிருக்கும் அல்லது தங்கள் தங்கு மிடங்களில் இல்லாத பல குடிமக்கள் வாக்களர் பட்டியலில் இருந்து நீக்கபபடுவார்கள். குறிப்பாக, உயர்கல்வி அல்லது வேலைக்காக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அல்லது வெளிநாடுகளில் இருக்கும் அந்தமான் தீவுகளின் இளைஞர்கள்/மாணவர்கள் தங்கள் படிவங்களை சமர்ப்பிப்பதில் அதிக சிரமத்தி ற்கு உள்ளாக்கப்படுவர். இதன் விளைவாக வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்களின் பெயர்கள் நீக்கப்படும் வாய்ப்பு உள்ளது. பீகார் மாதிரியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்வதற்கு அந்த மான் & நிகோபார் யூனியன் பிரதேசத்தின் புவி யியல் நிலைமை ஏற்கத்தக்கதாக இல்லை. பல ஆண்டுகளாக தீவுகளில் தங்கியிருக்கும் பலரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்காக வாக்காளர் திருத்தம் மேற்கொள் ளப்படுகிறது என சந்தேககிக்கபடுகிறது. சமீபத்தில் அந்தமான் & நிகோபார் முதன்மை தேர்தல் அதிகாரி அழைப்பின் பேரில் நடை பெற்ற கூட்டத்தில், பீகார் மாநிலத்தில் மேற் கொள்ளப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் போன்று அந்தமானிலும் நடைமுறைப்படுத்தப் பட்டால் தீவு மக்கள் எதிர்கொள்ளும் சிர மங்களை சிபிஎம் சுட்டிக்காட்டியது. அதனால் அந்தமான் & நிக்கோபார் தீவு களின் முதன்மை தேர்தல் அதிகாரி, சிபிஎம் அந்தமான் & நிகோபார் பிரதேச மாநிலக் குழு வின் கருத்தை தில்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தெரிவித்து, சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ளாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.