states

img

லட்சுமி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

லஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
கரூர் மாவட்ட ஜவுளி தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களின் நிதித்தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் 1926ம் ஆண்டு லஷ்மி விலாஸ் வங்கி துவங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக கடும் நெருக்கடியில் சிக்கி உள்ள லஷ்மி விலாஸ் வங்கி 2020ம் ஆண்டின் கடந்த ஜூலை செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் மட்டும் ரூ.397 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. 
இதைத்தொடர்ந்து ரிசர்வ்வங்கி நிதிநெருக்கடியில் சிக்கி உள்ள லஷ்மி விலாஸ் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் சிங்கப்பூர் வங்கியான டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது. 

இதைத்தொடர்ந்து  லஷ்மி விலாஸ் வங்கியை பொதுத்துறை வங்கியுடன் இணைக்க வேண்டும் என்று அகில இந்திய வங்கிகள் சம்மேளம் கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் இன்று லஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.