states

img

தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து தெலுங்கானா மாநில சட்டமன்றமும் தீர்மானம்

தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து தெலுங்கானா மாநில சட்டமன்றமும் தீர்மானம்

தென் மாநிலங்களில் மக்களவை தொகுதியை குறைக்கும் வகையில் மோடி அரசு தொகுதி மறுசீரமைப் பை மேற்கொள்ள உள்ளது. இதனை எதிர்த்து காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா மாநில சட்டமன்றம் தீர்மானம் நிறை வேற்றியுள்ளது. இதுதொடர்பாக தெலுங்கானா அரசாங்கம் நிறைவேற்றி உள்ள தீர்மானத்தில்,”தொகுதி மறு சீரமைப்பு பணி, மாநிலங்களுடன் வெளிப் படையான ஆலோசனைகள் இல்லாமல் திட்டமிடப்பட்டுள்ள விதம் குறித்து இந்த அவை தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது. தொகுதி மறுசீர மைப்பு பணியானது, அனைத்து மாநில அரசுகள், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு வெளிப்படையாகவும் மேற்கொள்ளப் பட வேண்டும்” என  அதில் கூறப்பட் டுள்ளது.