states

குஜராத் பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு

குஜராத் பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு

காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.,யான இம்ரான் பிர தாப்கார்ஹி “ஓ ரத்தவெறி கொண்ட வர்களே, நான் சொல்வதைக் கேளுங் கள்” எனத் தொடங்கும் கவிதையை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். வன்முறையை தூண்டும் வகையில் கவிதையை பகிர்ந்ததாக இம்ரான் பிரதாப்கார்ஹி மீது பாஜக ஆளும் குஜராத் மாநில அரசின் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. ஆனால் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த வர் என்பதால் இம்ரான் பிரதாப்கார்ஹி யை ஒடுக்கும் நோக்கத்திலேயே குஜ ராத் அரசு வழக்குப் பதிவு செய்துள்ள தாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. தொடர்ந்து தன் மீதான வழக்கை எதிர்த்து இம்ரான் பிரதாப்கார்ஹி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓஹா, உஜ்ஜல் புயான் அமர்வில் வெள்ளிக்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது. குஜராத் மாநில அரசு மற்றும் இம்ரான் பிரதாப்கார்ஹி என இரு தரப்பு வாதத்திற்கு பிறகு உச்சநீதி மன்ற நீதிபதிகள், “ஒருவரின் கருத்து பெரும்பாலானோருக்கு பிடிக்க வில்லை என்றாலும், அந்நபரின் கருத்து சொல்லும் உரிமை மதிக்கப்படவும், பாதுகாக்கப்படவும் வேண்டும். கவிதைகள், நாடகங்கள், கலைகள் ஆகி யவை, மனிதர்கள் வாழ்வை மேலும் அர்த்தமாக்குகின்றன. இதனால் இம்ரான் பிரதாப்கார்ஹி மீது தேவையின்றி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்” என நீதிபதிகள் அபய் ஓஹா, உஜ்ஜால் புயான் உத்தரவிட்டு குஜராத் பாஜக அரசின் அடாவடிக்கு குட்டு வைத்தனர்.