திடீர் மேகவெடிப்பு ஜம்மு-காஷ்மீரில் 33 பேர் பலி
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவ ட்டத்தில் அமைந்துள்ளது மிச்சைல். இப்பகுதியில் பிரசித்தி பெற்ற மாதா துர்க்கை கோவில் உள்ளது. வியாழக்கிழமை அன்று வழக்கம் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் துர்க்கை கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், பிற்பகல் 12 மணி யளவில் மிச்சைல் பகுதியில் கனமழை பெய்யத் தொடங்கியது. அடுத்த சில நிமி டங்களில் திடீரென மேகவெடிப்பு நிகழ, ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் மழை அருவி போல கொட்டியது. இத னால் மிச்சைல் பகுதி வெள்ளக்காடாய் மாறியது. தகவல் அறிந்த பேரிடர் மீட்புப் படை, மீட்புப் பணியில் தீவிரமாக ஈடு பட்டது. எனினும் காட்டாற்று வெள்ளத் தில் சிக்கி பலர் காணாமல் போயினர். வியாழனன்று மாலை நிலவரப்படி, கிஷ்த்வார் வெள்ளத்தில் சிக்கி உயிரி ழந்த 33 பேரின் உடல்கள் (பஹல்காம் மேகவெடிப்பும் சேர்த்து) மீட்கப்பட்டுள் ளது. காயமடைந்த 45 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலி எண்ணிக்கை உயரும் மேக வெடிப்பு ஏற்பட்ட அருகில் உள்ள பகுதியான சோஸ்டியில் பலர் வெள்ளப் பெருக்கில் சிக்கி மாயமாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என செய்திகள் வெளி யாகியுள்ளன. மேகவெடிப்பை தொடர்ந்து மாதா துர்க்கை கோவிலின் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.