பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஆணவ படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான அவரது தந்தையை காவல்துறையினர் தேடி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக அரசை புகழ்ந்து பேசிய சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ பூஜா பால், அக்கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனுக்கு வழங்கிய ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பீகாரில் ஆக.17 முதல் வாக்காளர் உரிமை யாத்திரையை தொடங்குகிறார்.
அமெரிக்கா உருவாக்கி உள்ள 6,500 கிலோ எடை கொண்ட “ப்ளூ பர்ட்” செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ தயாராகி வருகிறது.