states

img

நாடு முழுவதும் விவசாயிகள் - தொழிலாளர்கள் பிரம்மாண்ட போராட்டம் மோடி - டிரம்பின் கொடும்பாவி எரிப்பு

நாடு முழுவதும் விவசாயிகள் - தொழிலாளர்கள் பிரம்மாண்ட போராட்டம் மோடி - டிரம்பின் கொடும்பாவி எரிப்பு

தாராள வர்த்தக உடன்பாடு, அமெரிக்காவின் 50% வரி விதிப்பை எதிர்த்து

நேரடியாகவோ, மறைமுக மாகவோ ரஷ்ய எண் ணெய்யை வாங்கிய தற்காக ஆகஸ்ட் 6ஆம் தேதி அமெ ரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்  இந்தியா மீது 25% கூடுதல் வரி  விதிக்கப்படும் என்று அறிவித்தார். ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைமுறை க்கு வரும் இந்த உத்தரவு, இந்தியா விலிருந்து அமெரிக்காவில் இறக்கு மதி செய்யப்படும் பொருட்கள் மீதான மொத்த வரி 50% ஆக அதிகரிக்கும். இது அமெரிக்கா வால் விதிக்கப்படும் வரிகளில் மிகவும் அதிகமான ஒன்றாகும். இதற்கு எதிராக பிரதமர் மோடி எதிர்ப்பை வெளிப்படுத்தி சாதா ரண அறிக்கை கூட வெளியிட வில்லை. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி கட்சிகள், விவ சாய அமைப்புகள், தொழிற்சங் கங்கள் மட்டுமே டிரம்ப்பின் அடா வடி வரி விதிப்பிற்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், தாராள வர்த்தக உடன்பாடு மற்றும் அமெரிக்காவின் 50% இறக்குமதி வரியை எதிர்த்து ஆகஸ்ட் 13ஆம் தேதி நாடு முழு வதும் விவசாயிகள், தொழிலா ளர்கள் பிரம்மாண்ட போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது “இந்தியா - பிரிட்டன் இடையேயான  தாராள வர்த்தக உடன்பாட்டை ரத்து செய்க!; இந்தியாவிற்கு எதிரான அமெ ரிக்காவின் 50% இறக்குமதி வரியை ரத்து செய்க! ; பன்னாட்டு நிறுவ னங்களே இந்தியாவை விட்டு வெளியேறு!; விவசாயத்தில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை எதிர்ப் போம்!” உள்ளிட்ட முழக்கங்க ளுடன் பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் கொடும்பாவி மற்றும் இந்தியா- பிரிட்டன் இடையேயான இலவச வணிக ஒப்பந்தத்தின் நகலை எரித்து விவசாயிகள், தொழிலா ளர்கள் கடும் எதிர்ப்பை வெளிப் படுத்தினர். பிரதமர் மோடிக்கு எஸ்கேஎம் எச்சரிக்கை இதுதொடர்பாக ஐக்கிய விவசா யிகள் முன்னணி (எஸ்கேஎம் - சம் யுக்த கிசான் மோர்ச்சா) வெளி யிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா - பிரிட்டன் இடையே யான  தாராள வர்த்தக உடன்பாடு மற்றும் இந்தியாவிற்கு எதிரான அமெரிக்காவின் 50% இறக்குமதி வரி விதிப்பை எதிர்த்து, ஆகஸ்ட் 13ஆம் தேதி நாடு முழுவதும் நடை பெற்ற பிரம்மாண்டமான போராட் டங்களில் பங்கேற்ற அனைத்து விவ சாயிகள் மற்றும் தொழிலாளர்க ளை ஐக்கிய விவசாயிகள் முன் னணி மனதார வாழ்த்துகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் பிரதமர்  மோடியின் கொடும்பாவி, இந்தியா- பிரிட்டன் இடையேயான  தாராள வர்த்தக உடன்பாட்டின் நகலை எரிப்பதன் மூலம் நாடு முழுவதும் விவசாயிகள், தொழிலாளர்கள் கோபம் வெளிப் பட்டது. இந்த போராட்டத்தில் 10 மத்திய தொழிற்சங்கங்கள், பிற யூனியன்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் கூட்டமைப்புகள் இணைந்து பங்கேற்றுள்ளன. ஏமாற்றும் மோடி 2017இல் பிரதமர் மோடி, 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவ தாக உறுதியளித்தார். ஆனால், உண்மையில் அவரது கார்ப்பரேட் சார்ந்த கொள்கைகள், விவசா யத்தில் உற்பத்திச் செலவு மற்றும் துயரத்தை மட்டுமே இரட்டிப்பாக்கி யுள்ளன. லாபகரமான குறைந்த பட்ச ஆதரவு விலை (MSP) மற்றும் முழுமையான கடன் தள்ளுபடி மறுக்கப்படுவது, கடந்த 3 ஆண்டுக ளில் ரூ.85,000 கோடி உர மானி யத்தை குறைப்பது, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பது போன்ற  கொள்கைகள் இந்திய விவசாயத் தின் போட்டித் திறனை முற்றிலும் அழித்துள்ளன. இந்தியாவில் தினமும் 31 விவசாயிகள் தற் கொலை செய்து கொள்கிறார்கள். விவசாயக் குடும்பங்கள் கடின வாழ்க்கையால் நகரங்களுக்கு குடிபெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, தொழிலாளர் வர்க் கத்தின் பேரம் செய்யும் திறனை பாதிக்கிறது. சரணடையும் மோடி அரசு அனைத்து தொழிலாளர்களின்  உரிமைகளைப் பாதுகாக்கவும், உள்நாட்டு பொருளாதாரத்தை உயிர்ப்புடன் வளர்த்து உலகச் சந்தையில் போட்டியிடும் வகை யில் முன்னேற்றம் அடையவும் மோடி அரசு முயற்சி செய்கிறதா? இல்லை. மாறாக, இயற்கை வளங் கள் மற்றும் மனிதவளத்தை கார்ப்பரேட்கள் கொள்ளைய டிக்கும் கொள்கைகளையே தொடர்ந்து பின்பற்றுகிறது. பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற வளர்ந்த நாடு களின் அழுத்தத்திற்கு மோடி அரசு சரணடைந்து, இந்திய பொருளா தாரத்தை திறந்து விட்டு  தாராள வணிக ஒப்பந்தங்களில் கையெ ழுத்திட்டுள்ளது. இது இந்தியாவின் இறையாண்மைக்கே ஆபத்து விளைவிக்கிறது. அதே போல அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் கொடுமைகளுக்கு எதிராக உறுதியாக நடவடிக்கை  எடுக்காமல் மோடி அமைதியாக இருப்பது மிக மோசமானது ; கண்டனத்துக்குரியது. எச்சரிக்கை விவசாயிகளுக்கு லாபகரமான விலை உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்;  தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரக் கூலி வழங்கப்பட வேண்டும்; கடன் சுமையிலிருந்து தொழிலாளர்கள் விடுவிக்கப்பட வேண்டும்; 4 தொழிலாளர் சட்டங் கள் ரத்து செய்யப்பட வேண்டும்; விவசாய நிலங்களை கார்ப்ப ரேட்கள் கையகப்படுத்துவதை தடுக்க வேண்டும்; வேலையின்மை நெருக்கடி தீர்க்கப்பட வேண்டும்; கார்ப்பரேட் கொள்ளையை நிறுத்த வேண்டும்; லாபகரமான குறைந்த பட்ச ஆதரவு விலை; உள்நாட்டு பொருளாதாரத்தை உயிர்ப்புடன் வளர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மோடி அரசு உட னடியாக செயல்படுத்த வலியு றுத்துகிறோம். இல்லையெனில், கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து  போராட்டங்கள் தீவிரமடையும்” என அதில் எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.