tamilnadu

img

சிபிஎம் மீது அவதூறு பரப்பும் சமூக விரோதிகளை கண்டித்து திருவிளையாட்டத்தில் மாபெரும் பேரணி - ஆர்ப்பாட்டம்

சிபிஎம் மீது அவதூறு பரப்பும் சமூக விரோதிகளை கண்டித்து திருவிளையாட்டத்தில் மாபெரும் பேரணி - ஆர்ப்பாட்டம்

 மயிலாடுதுறை, ஆக. 14 - 40 ஆண்டுகால பாரம்பரியத்தை கொண்ட  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிளை யாட்டம் அலுவலகத்தின் மீதான அநியாய தாக்குதலை எதிர்த்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுபட்டு குரலெழுப்பினர்.  மக்கள் எதிர்ப்பு  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருவிளையாட்டம் கடைவீதியில் கடந்த 40 ஆண்டுகளாக மக்களின்  நம்பிக்கையின் கோட்டையாக விளங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவல கத்தை நிர்மூலமாக்க முயலும் சமூக விரோதி களின் அடாவடித்தனத்திற்கு எதிராக புதனன்று நடைபெற்ற மாபெரும் பேரணி மக்கள் சக்தியின் வெளிப்பாடாக அமைந்தது.  ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பேரணியில் மாநில செயற்குழு  உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் ஆணித்தரமான கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலா ளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ் ஆகியோ ரின் உரைகள் மக்களின் இதயங்களைத் தொட்டன.  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், ஜி.வெண்ணிலா, சி.விஜயகாந்த், கே.பி.மார்க்ஸ், டி.ஜி.ரவி, அமுல் காஸ்ட்ரோ மற்றும் மாவட்டக் குழு, ஒன்றியக் குழு உறுப்பி னர்கள், கிளைச் செயலாளர்கள் ஆகியோரும் பேரணியில் பங்கேற்றனர்.  மக்கள் ஒற்றுமையின் அற்புத காட்சி  அரும்பாக்கம் பாலத்திலிருந்து தொடங்கி திருவிளையாட்டம் கடைவீதி வரை பரவிய இந்த மக்கள் அலையில் திருவிளையாட்டம், கொத்தங்குடி, திருக்கடையூர், டி.மணல்மேடு, திருமெய்ஞானம், இலுப்பூர் சங்கரன்பந்தல், பூதனூர், திருவிடைக்கழி, துடரிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் மக்கள் கலந்து கொண்டனர். இது வெறும் கட்சி பேரணி அல்ல - இது மக்கள் நீதிக்கான குரல்.  40 ஆண்டுகால சேவையின் சாட்சியம்  1983ஆம் ஆண்டிலிருந்து மக்களின் நம்பிக்கையின் மையமாக செயல்பட்டு வரும் திருவிளையாட்டம் மார்க்சிஸ்ட் கட்சி அலு வலகம், 2002ஆம் ஆண்டிலிருந்து மறைந்த  தோழரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான கோ.பாரதிமோகன் நினைவாக அர்ப்பணிப்பின் சின்னமாக விளங்கி வருகிறது.  இந்த புனித அலுவலகம் வெறும் கட்டடம் அல்ல - இது மக்களின் வாழ்வில் ஒளி யேற்றும் தீபம். சமூக நல்லிணக்கம், சாதி  மறுப்பு திருமணங்கள், தண்ணீர் பந்தல், ரத்த தான முகாம்கள், பொது மக்களுக்கான பேருந்து கால அட்டவணை, ஏழை எளிய  மக்களுக்கான உதவி மையம் - இப்படி எண்ணற்ற சேவைகளின் மூலம் திருவிளை யாட்டம் மக்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ளது.  வரலாற்றுப் பின்னணி மற்றும் சட்டப்பூர்வமான உண்மைகள்  1996ஆம் ஆண்டு அன்றைய செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றிய தலைவராக இருந்த  ராணி ராமசாமி, அலுவலகத்தின் பின்புறம் இருந்த இடத்தை விலைக்கு வாங்கினார். அவரிடமிருந்து மணிகிராமம் கிராமத்தைச் சேர்ந்த லில்லி தேவதாஸ் என்பவர் அந்த இடத்தை விலைக்கு வாங்கினார். இவர்கள் இருவருமே அந்த இடத்தின் தென்புறம் அமைந்துள்ள மன்மதன் கோவில் தெரு சாலையை பயன்படுத்தி வந்தனர்.  நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறை யில் இருந்து வரும் உண்மை - அந்த குறிப்பிட்ட இடத்திற்கு சென்று வர மன்மதன் கோவில் தெரு சாலைதான் பிரதான வழியாக இருந்தது.  2023ஆம் ஆண்டு மேற்கண்ட இடத்தை திருவிளையாட்டத்தைச் சேர்ந்த பிலிப்-பாத்திமா தம்பதியினரின் மூத்த மகனான கென்னடி என்பவர் விலைக்கு வாங்கி, தற்போது அதில் வணிக வளாகம் கட்டி யிருக்கிறார். வணிக வளாகத்தின் திறப்பு விழா வும் நடைபெற்றுள்ளது.   அநீதியின் முகம்  வேதனையின் விஷயம் இதுதான் - வணிக வளாகத்திற்கு செல்வதற்கு ஏற்கனவே தனி  சாலை இருந்தும் (இதே சாலை ஊராட்சி அலு வலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்திற்கும் செல்கிறது), சுயநல வர்த்தக லாபத்திற்காக நூறு ஆண்டுகால பாரம்பரியத்தையும், மக்கள் சேவையையும் அழிக்க முயலும் கென்னடி, ஸ்டீபன் ராஜ், இளையராஜா ஆகியோரின் அராஜகத்தனம். இவர்கள் அலுவலக சுவரை திடீரென உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து இதைத் தடுத்து நிறுத்தினர்.  இன்னும் கொடுமையானது - கென்னடி தனது சொந்த இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளரும், அவரது குடும்பத்தினரும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அவ்விடத்தில் விரும்பத் தகாத செயல்கள் நடப்பதாகவும் சமூக வலை தளங்களில் தொடர்ச்சியாக அவதூறுகளைப் பரப்பும் நயவஞ்சக செயல்.  உண்மை என்னவென்றால் - முதலில் இது கென்னடியின் பட்டா இடமே இல்லை; அரசு  இடம். இதை தனது பட்டா இடம் என்று சொல்வதே பொய். இது மாவட்டச் செயலா ளரின் குடும்பத்தின் தேவைக்கான இடமும் இல்லை - இது கட்சிக்கான பொது இடம். கென்னடி சிறுவனாக இருந்த காலத்திலேயே அவ்விடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கிளை அலுவலகம் செயல்பட்டுவருகிறது.   சட்டத்தின் பார்வையும் நியாயமும்  சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது: இந்த இடம் நெடுஞ்சா லைத் துறைக்கு சொந்தமானது. நீதிமன்றம் நெடுஞ்சாலைத் துறையை இயற்கை நீதிக்கு உட்பட்டு முடிவெடுக்க அறிவுறுத்தியுள்ளது.  ஆனால் வேதனை இதுதான் - கடந்த ஜூலை 24அன்று எந்தவித முன்னறிவிப்புமின்றி, லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் காவல்துறையின் துணையுடன் ஜேசிபி இயந்திரம் கொண்டு அலுவலகத்தை இடித்த கொடுமை.   மக்கள் வெற்றியின் அடையாளம்  ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளின் துணிவு அதைவிட உயர்ந்தது. இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் உறுதியுடன் அலுவல கத்தை கட்டி மக்கள் சேவையை தொடர்கின்ற னர். இதுதான் உண்மையான வெற்றி - மக்க ளின் விருப்பத்திற்கும் நீதிக்கும் முன்னால் அநீதியின் தோல்வி!   மக்கள் சக்தியின் செய்தி  இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையுடன் செயல்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலு வலகங்கள் ஒருபோதும் மூடப்படுவதில்லை. இவை தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எனும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்காகவும் இரவு பகலாக பணியாற்றும் சேவை மையங்கள்.   மார்க்சிஸ்ட் கட்சியின் பேரணி ஒரு தெளிவான செய்தியை அனுப்புகிறது: மக்கள் சக்திக்கு முன்னால் சுயநல சக்திகளின் சதித்திட்டங்கள் தோல்வியடையும். நீதி நிலைநாட்டப்படும். மக்கள் சேவையின் ஒளி அணையாது.  - ஜான்சன்