ஓய்வை அறிவிக்கவே மோடி ஆர்எஸ்எஸ் தலைமையகம் சென்றுள்ளார் சிவசேனா (உத்தவ்) பகீர் குற்றச்சாட்டு
பாஜகவின் தாய் அமைப் பான ஆர்எஸ்எஸின் தலை மையகம் மகாராஷ்டிர மாநிலம் நாக் பூரில் உள்ளது. பிரதமராக பதவி யேற்றதற்குப் பின்னர், அதாவது 10 ஆண்டுகளு க்குப் பிறகு மோடி முதல்முறை யாக ஞாயிறன்று ஆர்எஸ்எஸ் தலைமை அலுவல கத்திற்குச் சென்றுள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடி தனது ஓய்வை அறிவிக்கவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்கு திடீ ரென சென்றுள்ளார் என சிவசேனா (உத்தவ்) கட்சியின் தலைமை தேசிய தொடர்பாளரும், மாநிலங்களவை எம்.பி.,யுமான சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”எனக்கு தெரிந்தவரை கடந்த 10-11 ஆண்டு களாக ஆர்எஸ்எஸ் அலுவலகத்தி ற்குச் செல்லாத பிரதமர் மோடி, தற் போது திடீரென சென்றுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டின் பிரதமரை மாற்ற விரும்புவதாகவே நான் நினைக்கிறேன். அதனால் மோடி தனது ஓய்வு விண்ணப் பத்தை அளிக்கவே அவர் அங்கு சென்றிருக்கலாம். பிரதமர் மோடியின் பதவிக்காலம் (75 வயது விதி) முடிந்து விட்டது. பாஜகவிற்கும் அடுத்த தலைவரை தேர்வு செய்ய விரும்பு கிறார்கள். அதன்படி அடுத்த பிரத மரை ஆர்எஸ்எஸ்தான் தேர்வு செய்யும். அடுத்த பிரதமர் மகாராஷ்டி ரத்தைச் சேர்ந்தவராக இருப்பார். இதுகுறித்து விவாதிக்கவே ஆர்எஸ்எஸ் அலுவலகத்துக்கு வர மோடிக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது” என அவர் கூறியுள்ளார். சஞ்சய் ராவத்தின் இந்த கருத்து அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி யுள்ளது.
பட்னாவிஸ் மறுப்பு
பாஜக மூத்த தலைவரும், மகாராஷ்டிரா முதலமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ் சஞ்சய் ராவத்தின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”2029ஆம் ஆண்டு வரை மோடி தான் பிரதமர். இதில் மாற்றமில்லை” என அவர் கூறினார்.