ஆர்ஜேடி செய்தி தொடர்பாளர் பிரியங்கா பார்தி
பாஜக ஆளும் தில்லியில் காவல்துறை (ஒன்றிய உள்துறை அமைச்சக கட்டுப்பாடு) முன்பே ஆடையைக் கிழிப்போம் என்று இந்துத்துவா குண்டர்கள் பெண்களுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். காவல்துறை இல்லாத இடங்களில் பெண்களின் நிலைமை என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
கிரிக்கெட்டில் ‘கை குலுக்காமல் இருப்பது’ என்பது இந்தியா தொடங்கியுள்ள ஒரு முட்டாள்தனமான விஷயம். இது நம்மைப் (இந்தியா) போன்ற ஒரு நாட்டிற்கு அழகல்ல. விளையாட்டின் மாண்போடு ஒழுங்காக விளையாடுங்கள், இல்லையென்றால் விளையாடுவதையே நிறுத்திவிடுங்கள் (பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக).
மூத்த பத்திரிகையாளர் பியூஸ் ராய்
பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் பதிவு செய்யப்படாத ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அறுவை சிகிச்சை செய்த 12ஆம் வகுப்பு மாணவன் மற்றும் ஒரு கலைப்பிரிவு பட்டதாரி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த முறையற்ற அறுவை சிகிச்சையின் போது அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஊடக உண்மை சரிபார்ப்பாளர் முகமது ஜுபைர்
மத வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில், உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள வள்ளிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சையத் எஹ்சான் அலி என்ற முஸ்லிம் நபர், துர்க்கை அம்மன் கோவில் கட்டுவதற்காகத் தனது 2,000 சதுர அடி நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.
