பிரதமர் மோடி ஜப்பான் சுற்றுப் பயணம்
பிரதமர் மோடி, இந்தியா - ஜப்பான் 15-ஆவது ஆண்டு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக வியாழனன்று (ஆக.28) ஜப்பான் புறப்பட்டார். ஆகஸ்ட் 29-30 ஆகிய இரண்டு நாட்கள் ஜப்பானில் முக்கியத் துறை அமைச் சர்கள், அதிகாரிகள் மற்றும் அந்நாட்டு பிரதமர் இஷிபா உள்ளிட்டோருடன் வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய நாட்க ளில் தியான்ஜின் நகரில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டிற்காக பிரதமர் மோடி சீனாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.