போர்ட் பிளேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தமான் நிகோபர் மாநில 12-ஆவது மாநாடு 2024 டிசம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் போர்ட் பிளே ரில் மிகுந்த உற்சாகத்து டன் நடைபெற் றது. செந்தொண்டர் பேரணி மாநாட்டின் துவக்கமாக மாநி லச் செயலாளர் டி. அய்யப்பன் மற்றும் செயலக உறுப்பினர்கள் தலைமையில் மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. இதில், நூற்றுக்க ணக்கான கட்சித் தோழர்கள் - ஆத ரவாளர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக சிவப்புப் புடவை அணி ந்த பெண் தோழர்கள், சிவப்பு நிற டி-ஷர்ட் அணிந்த இளந்தோழர்கள் பெருந்திரளாக ஊர்வலத்தில் கலந்து கொண்டது போர்ட் பிளேர் மக்களின் கவனத்தை ஈர்த்தது.
மாபெரும் பொதுக்கூட்டம்
இந்த மக்கள் திரள் ஊர்வலம் திரங்கா பூங்காவில் மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டமாக மாறி யது. கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி. ராம கிருஷ்ணன் துவக்கவுரையாற்றி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே கிளை அளவில் துவங்கி மத்தியக்குழு வரை ஜன நாயக முறையில் மாநாடுகளை நடத்தி புதிய குழுக்களைத் தேர்ந் தெடுக்கிறது என்று அவர் தெரி வித்தார். மோடி அரசின் கொள்கை கள் மேலும் மேலும் மக்களை வறு மையின் விளிம்புக்குத் தள்ளிக் கொண்டிருக்கும் அதேவேளை யில், அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் வரிச் சலுகைகள் வழங்கப்படுவதை ஜி. ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்ற முன்னாள் உறுப் பினரும், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான டாக்டர் சுஜன் சக்கரவர்த்தி, ஆங்கிலேயர் களுக்கு எதிராகப் போராடிய நூற் றுக்கணக்கான புரட்சியாளர்கள் அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு நாடு கடத்தப்பட்டு, செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டு, பலர் ஆங்கிலேயர்களால் கொல்லப் பட்டதை நினைவுகூர்ந்தார். இன்றைய மோடி அரசோ, நாட்டு மக்களை மறந்து விட்டு, கார்ப்ப ரேட் முதலாளிகளின் நலன்களுக் காக மட்டுமே செயல்படுவதாக குறிப்பிட்டார். மாநிலச் செயலாளர் தோழர் டி.அய்யப்பனும் சிறப் பான உரையை வழங்கினார். பிரதிநிதிகள் மாநாடு டிசம்பர் 29 அன்று, போர்ட் பிளே ரில் உள்ள அதுல் ஸ்மிருதி சமிதி மண்டபத்தில் (வங்காளி கிளப்) பிரதிநிதிகள் மாநாடு நடைபெற் றது. 6 பெண்கள் உட்பட 73 பிரதி நிதிகளும் பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். மூத்த தலை வர் பி.சந்திரசூடன் கட்சிக் கொடி யை ஏற்றினார். அந்தமான் தீவுகளில் கட்சியின் நோக்கங்களையும், அதனை செயல்படுத்துவதற்கான வழி முறைகளையும், கட்சியையும் வெகுஜன அமைப்புகளையும் வலுப்படுத்துவதற்கான நடவடிக் கைகளை உள்ளடக்கிய “அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான பணி கள்” என்ற ஆவணத்தை மாநிலச் செயலாளர் தோழர் டி. அய்யப்பன் சமர்ப்பித்தார். இந்த ஆவணம் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப் பட்டது.
ஜி. ராமகிருஷ்ணன் சிறப்புரை
பிரதிநிதிகள் மாநாட்டில் உரை யாற்றிய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், அந்தமான் தீவுகளில் கட்சியின் செயல்பாடு குறித்து திருப்தி தெரி வித்தார். கடந்த மூன்று ஆண்டு களில் கட்சி நடத்திய போராட்டங் கள், தீவு மக்களிடையே நல்ல தாக் கத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறி னார். 2022 ஏப்ரலில் கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற அகில இந்திய 23-ஆவது மாநாடு வகுத்த ளித்த கட்சியின் சுயபலத்தை அதி கரிக்கும் பணியின் ஒருபகுதியாக இது அமைந்திருப்பதாக கூறிய ஜி. ராமகிருஷ்ணன், யூனியன் பிர தேசத்தில் கட்சியின் தளத்தை விரிவுபடுத்த தொடர்ந்து கடினமாக உழைக்குமாறு கட்சித் தலைவர் களையும் தொண்டர்களையும் கேட்டுக்கொண்டார். தீவுகளில் அனைத்து மட்டங்களிலும் கட்சிக் குழுக்களை வலுப்படுத்த வேண்டி யதன் அவசியத்தை அவர் வலியு றுத்தினார். புதிய மாநிலக்குழு தேர்வு இம்மாநாட்டில் 19 பேர் கொண்ட மாநில அமைப்புக்குழு தேர்ந்தெ டுக்கப்பட்டது. டி. அய்யப்பனை மீண்டும் செயலாளராகத் தேர்ந்தெ டுக்கப்பட்டார். இந்த மாநாடு, அந்தமான் நிகோ பர் தீவுகளில் கட்சியின் வளர்ச்சி யையும், ஜனநாயக செயல்பாட்டை யும் எடுத்துக்காட்டுவதாக அமைந் தது.