ஒன்றிய, மாநில பாஜக அரசுகளை கண்டித்து அருணாச்சலப் பிரதேச மக்கள் தொடர் போராட்டம்
‘எங்கள் நிலங்களுக்காக நாங்கள் உயிரையும் விடுவோம்!’
இடாநகர் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. முதல மைச்சராக பேமா காண்டு உள்ளார். இந்நிலையில், அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் சியாங் மாவட் டத்தில் உள்ள பெகிங் கிராமத்தில், “சியாங் அப்பர் பல்நோக்கு திட் டம்” என்ற பெயரில் 12,000 மெகா வாட் நீர் மின் திட்டத்தை எதிர்த்தும் மற்றும் அங்கு ஆயுதப் படையை குவித்து இருப்பதைக் கண்டித்தும் மே 23ஆம் தேதி முதல் சியாங் மாவட்டத்தின் 27 பழங்குடி கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பழங்குடி மக்களை துரத்த திட்டம் மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நீர்மின்சாரக் கழ கத்தால் (NHPC) செயல்படுத்தப் படும் சியாங் நீர் மின் திட்டத்தை அமல்படுத்தினால், அப்பகுதியில் வாழும் 27 கிராம பழங்குடி மக்க ளின் வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் இழந்து வேறு இடத்தி ற்கு இடம்பெயரும் சூழல் ஏற்படும். அதே போல சியாங் மாவட்டத்தில் உள்ள வளமான, பல்லுயிர் இழப்பு போன்ற சுற்றுச்சூழல் பாதிப்புக ளும் தீவிரமடையும். இதனால் தான் சியாங் நீர் மின் திட்டத்திற்கு அப்பகுதி பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆயுதப் படைகள் குவிப்பு 2024ஆம் ஆண்டு முதலே சியாங் மாவட்டத்தில் நீர்மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வரு கிறது. இந்தப் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கத்தில் மே 21ஆம் தேதி அன்று சியாங், அப்பர் சியாங் மற்றும் கிழக்கு சியாங் மாவட்டங்க ளில் மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) வீரர்களை மோடி அரசு நிலை நிறுத்தியுள்ளது. நீர் மின் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களை உடனடியாக வெளியேற வேண்டும் என மத்திய ஆயுதக் காவல் படை உத்தரவிட்டது. தொங்கு பாலம் எரிப்பு மே 21ஆம் தேதி சியாங் மாவட் டம் மற்றும் எல்லைப் பகுதிகளில் மத்திய ஆயுதக் காவல் படை நிலைநிறுத்தப்பட்ட நாளன்று, ஆயுதப் படையை வாபஸ் பெற வேண்டும் என சியாங் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் மாநில பாஜக அரசு கண்டு கொள்ளாததால் அப்பர் சியாங் மாவட்டத்திற்கு செல்லும் தொங்கு பாலத்தை உள்ளூர் மக்கள் எரித்த னர். தொடர்ந்து மே 23 அன்று, போராட்டத்தின் மையப்பகுதியான சியாங் மாவட்டத்தில் உள்ள பெகிங் கிராமத்தில், கிராம மக்கள் ஆயுதப் படை பணியமர்த்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேரணி நடத்தினர். இதனை தொடர்ந்து இன்னும் அப்பகுதியில் தொடர் போ ராட்டம் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 3 நாட்களுக்கு முன் சியாங் மாவட்ட மக்கள்,“எங்கள் நிலங்க ளுக்காக நாங்கள் உயிரையும் கொடுப்போம்” என்ற பதாகை களை ஏந்தி ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசுகளை கண்டித்து பேர ணியுடன் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஆயிரக்க ணக்கான பழங்குடி கிராம மக்கள் பங்கேற்றனர். ஒன்றிய மற்றும் மாநில அரசு இந்த திட்டத்தை வாபஸ் பெறும் வரையிலும், ஆயு தப் படைகளை திரும்பப் பெரும் வரை போராட்டம் தொடரும் என சியாங் மாவட்ட மக்கள் அறி வித்துள்ளதாக செய்திகள் வெளி யாகியுள்ளன.