states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல ; பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது. நாட்டின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் கொடூரமாகத் தாக்கப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. அதற்காக ஒவ்வொரு இந்துவும் தாக்குதல் நடத்துவதாக சொல்லமுடியாது.

சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி

நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜித் தோவல் ஓய்வு பெறுவது நல்லது. இதனை நான் தனிப்பட்ட முறையிலும், நல்லெண்ணத்துடனும் கூறுகிறேன். பொறுப்பை விட்டுவிடுவதற்கும், வேறொருவர் இதை ஏற்கும் வாய்ப்பை அளிப்பதற்கும் சரியான நேரம்.

சிரோமணி அகாலிதள எம்.பி., ஹர்சிம்ரத் கவுல் பாதல்

பாஜக ஆளும் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநில துறைமுகங்கள் மூலம் பாகிஸ்தான் முதலாளிகளோடு நடைபெற்று வரும் வர்த்தகத்தை முதலில் நிறுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதானிக்கு சொந்தமான துறைமுகங்கள் பாகிஸ்தானோடு அதிக வர்த்தகத்தில் ஈடுபடுகிறது.

திரிணாமுல் எம்.பி., மஹுவா மொய்த்ரா

பஹல்காம் தாக்குதல் குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு செல்லாமல் பீகாருக்கு சென்று தேர்தல் பிரச்சாரம் செய்ய மோடிக்கு எப்படி தைரியம் வந்தது? பாஜகவுக்கு வாக்களித்தால் தான் நாட்டை பாதுகாக்க முடியும் என பேசுவாரா? வெட்கங்கெட்டவர்.