states

img

ஒற்றுமையை வலியுறுத்தி காஷ்மீரில் இஸ்லாமிய மாணவிகள் பிரம்மாண்ட பேரணி

ஒற்றுமையை வலியுறுத்தி காஷ்மீரில் இஸ்லாமிய மாணவிகள் பிரம்மாண்ட பேரணி

“பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக அணிவகுப்போம்”

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முக்கிய சுற்றுலா தலமாக இருப்பது பஹல்காம். நாட்டின் மிகப்பெரிய கோடை மலைவாசஸ்தலமான பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று  (செவ்வாய்) மாலை பயங்கர வாதிகள் இந்திய ராணுவ உடை யில் சுற்றுலாப் பயணிகள் மீது கோழைத்தனமாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்து - முஸ்லிம் என மொத்தம் 26  பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக “காஷ்மீரில் ஒன்றாக அணிவகுப்போம்” என்பதை வலியுறுத்தி, காஷ்மீர் இஸ்லாமிய மாணவிகள் அனந்த நாக் மாவட்டத்தில் பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.  ஆயிரக்கணக்கான மாண விகள் பங்கேற்ற இந்த  பேரணியில் “பஹல்காம் எங் களின் மிக மோசமான துக்கம்”, “அமைதிக்காக நாம் ஒன்றுபடு வோம்”, “நாட்டின் அனைத்து கண்களும் பஹல்காம் மீதே இருக்கட்டும்” என்ற பதாகைகளு டன்  இஸ்லாமிய மாணவிகள் முழக்கங்களை எழுப்பினர். மாண விகளின் முழக்கங்களால் அனந்த நாக் நகர வீதிகள் குலுங்கியது. மாணவர்கள் பாதுகாப்பு அரண் இஸ்லாமிய மாணவிகளின் பேரணி பாதுகாப்பிற்க்காக காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆனா லும் ஜம்மு-காஷ்மீர் கல்லூரி களில் பயிலும் அனைத்து மாண வர்களும், மாணவிகளின் பேர ணிக்கு தனியாக பாதுகாப்பு அரண் அமைத்து, இஸ்லாமிய மாணவி களுடன் அணிவகுத்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக ஒற்றுமையை வலியுறுத்தி காஷ்மீரில் இஸ்லாமிய மாணவி கள் நடத்திய பிரம்மாண்ட பேரணி சமூகவலைத்தளங்களில் வைர லாகி வருகிறது.

வன்முறையை தூண்டும் பாஜக ஆதரவு “கோடி மீடியா” ஊடகங்கள் இஸ்லாமிய மாணவிகளின் பேரணியும் மூடி மறைப்பு

பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு அணிவகுக்க காஷ்மீரில் ஒற்றுமை ஊர்வலங்கள் அடுத்த டுத்து நடைபெற்று வருகிறது. பஹல்காம் தாக்குதல் நடைபெற்ற அடுத்த நாளான புதன்கிழமை அன்று பஹல்காம், அனந்தநாக் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம், இந்து, சீக்கியர்கள், காஷ்மீர் பண்டிட்கள் என அனைவரும் ஒற்று மையுடன் பேரணி மற்றும் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே போன்று வியாழக்கிழமை அன்று காஷ்மீர் இஸ்லாமிய மாண விகள் ஒற்றுமையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பயங்கரவாத தாக்குதலை கண்டித்தும், மதநல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை பேணி காக்க காஷ்மீரில் நடைபெறும் போராட்டங் கள் அனைத்தும் சமூக வலைத் தளங்களில் மட்டுமே வைரலாகி வரு கிறது. ஆனால் பாஜக ஆதரவு பெற்ற “கோடி மீடியா” ஊடகங்கள் இத்த கைய நிகழ்வுகளை புறக்கணித்து வருகிறது. காஷ்மீரில் நடைபெற்று வரும் இந்துத்துவ குண்டர்களின் போராட்டத்தை மட்டும் தலைப்புச் செய்திகளாக வெளியிட்டு வன்முறை யை தூண்டும் வேலைகளில் “கோடி மீடியா” ஊடகங்கள் ஈடுபட்டு வருகின்றன.