வெள்ளத்தால் பாதித்த மக்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி சந்தித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களுக்குச் சென்ற அவர் பாதிக் கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி சேதம் குறித்துக் கேட்டறிந்தார். பஞ்சாப் மாநிலம் மிக மோசமான வெள்ளப் பேரழிவைச் சந்தித்துள்ளது. கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழையால் சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது. தொடர் கனமழை நிலை மையை மேலும் தீவிரப்படுத்தி வரு கிறது. இதுவரை வெள்ளத்தால் 56 பேர் உயிரிழந்துள்ளனர், 1.98 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன.