ராஜஸ்தான் பாஜகவில் உட்கட்சிப் பூசல் தீவிரமடைகிறது
பிரதமர் மோடியை பொது மேடையிலேயே புறக்கணித்த வசுந்தரா ராஜே
ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநில பாஜக மூத்த தலைவராக இருப்பவர் வசுந்தரா ராஜே சிந்தியா. தோல்பூர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவரான இவர் 2 முறை ராஜஸ்தான் முதல மைச்சர், ஒன்றிய அமைச்சர் (வாஜ்பாய் ஆட்சியில்) பதவி வகித்தவர். குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் கூட வசுந்தரா ராஜே தான். இத்தகைய சூழலில், கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் பாஜக 115 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இத னால் 3ஆவது முறையாக முதல மைச்சர் பதவியில் அமரும் பணி களை வசுந்தரா ராஜே தீவிரமாக முன்னெடுத்தார். ஆனால் பிரதமர் மோடி - அமித் ஷாவின் உத்தரவு என்று கூறி, ராஜ்நாத் சிங் துண்டுச் சீட்டை கொடுத்து வசுந்தரா ராஜேவை, “பஜன்லால் சர்மா தான் முதல மைச்சர்” என பொது மேடையி லேயே அறிவிக்க வைத்தார். இந்நிகழ்வு 2023 டிசம்பர் 12ஆம் தேதி நிகழ்ந்தது. அன்றைய தினத்தி லிருந்து 2025 ஆகஸ்ட் மாதம் 3ஆவது வாரம் வரை வசுந்தரா ராஜே 2 ஆண்டுகள் பொது மேடைக ளிலும், பொதுவெளியிலும் தலை காட்டாமல் இருந்தார். மோடி - ராஜே வாக்குவாதம் இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி பிரதமர் மோடி ராஜஸ்தான் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். சொந்த தொகுதியில் (ஜால்வார் அருகே) நடைபெற்ற நிகழ்வு என்பதால், வசுந்தரா ராஜே கலந்து கொண்டார். இந்நிகழ்வின் பொதுமேடைக்கு வரும் போது பிரதமர் மோடியை முதலமைச்சர் பஜன்லால் சர்மா, துணை முதல மைச்சர் தியா குமாரி ஆகியோர் வணக்கம் வைத்து வரவேற்றனர். ஆனால் வசுந்தரா ராஜே வணக்கம் வைக்காமலும், மோடியை கண்டு கொள்ளாமலும் வேறு பக்கம் திரும்பி நின்று கொண்டு இருந் தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மோடி தானாக சென்று வணக்கம் வைத்தார். ஆனால் வசுந்தரா ராஜே தலையை மட்டுமே ஆட்டினார். பதிலுக்கு வணக்கம் வைக்கவில்லை. பின்னர் மோடி உரையாட ஆரம்பிக்க, வசுந்தரா ராஜே கடும் கோபத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே “கோடி மீடியா” ஊடகங்கள் கேமராவை வேறு பக்கம் திருப்ப, அடுத்து என்ன நடந்தது என்று தெரிய வில்லை. ஆனால் மோடி பேசிக் கொண்டு இருக்கும் போதே வசுந்தரா ராஜே மேடையிலிருந்து பாதியிலேயே வெளியேறிச் சென்ற தாகவும், அதே போல அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் அவரு டன் சென்றதாகவும் கூறப்படு கிறது. இந்த சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதம் ஆகிவிட்ட சூழலில், காங்கி ரஸ் ஐடி விங் வசுந்தரா ராஜே - மோடி பொது மேடை மோதல் வீடியோவை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி உள்ளது. மேலும் வசுந்தரா ராஜே தனது ஆதரவாளர்களை திரட்டி பாஜகவை இரண்டாக உடைப்பது அல்லது “சிந்தியா” என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்க வாய்ப் புள்ளது என்றும் இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது மோடிக்கும் பாஜகவிற்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.