states

img

மூத்த குடிமக்கள் தொழில் தொடங்க கேரள அரசின் “புதிய இன்னிங்ஸ்” திட்டம்

மூத்த குடிமக்கள் தொழில் தொடங்க கேரள அரசின் “புதிய இன்னிங்ஸ்” திட்டம்

மூத்த குடிமக்கள் ஸ்டார்ட் அப்க ளைத் தொடங்க உதவுவ தற்காக, இடதுஜனநாயக முன்னணி ஆளும் கேரள அரசு ‘புதிய இன்னிங்ஸ்’ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டம் 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்க அரசாங்கம் ஆதரவளிக்கிறது. திட்டத்தைச் செயல்படுத்த ஸ்டார்ட் அப் மிஷனில் ஒரு சிறப்புப் பிரிவு உரு வாக்கப்பட உள்ளன. அதே போல பயிற்சி, நிதி உதவி மற்றும் வழிகாட்டுதலையும் வழங்க உள்ளன.  பொருத்தமான முயற்சிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை வெற்றிகரமாக நடத்துவதில் தொழில் மற்றும் வர்த்தக நிபுணர்கள் உதவுவார்கள். முதல் கட்டத்தில் அரசாங்கம் ரூ.5 கோடியை ஒதுக்க உள்ளது. இந்தத் தொகை பயிற்சித் திட்டங்கள், நிதி உதவி, தொழில்நுட்ப உதவி, சந்தைப் படுத்தல் ஆதரவு போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படும்.  மாதத்திற்கு 20 புதிய யோசனை களைச் செயல்படுத்துவதை நோக்கமா கக் கொண்ட ஒரு பெல்லோஷிப் திட்டமும் இதன் ஒரு பகுதியாகும். 12 மாத காலத்திற்கு 20 கூட்டாளிகள் நியமிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஊதியம் வழங்க ரூ. 60 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ‘விஸ்டம் பேங்க்’ என்ற சிறப்பு வழி காட்டுதல் திட்டமும் உடனடியாக செயல் படுத்தப்பட உள்ளன. ஓய்வு பெற்றவர் கள் மற்றும் நிபுணர்களின் அறிவு மற்றும்  அனுபவத்தை புதிய தலைமுறை தொழில் முனைவோருக்கு மாற்றுவதே புதிய இன்னிங்ஸின் முக்கிய நோக்கமாகும். அவர்களின் பட்டியல் ஒரு கோப்பக வடிவில் வெளியிடப்படும்.  திட்டத்திற்கு விண்ணப்பிக்கவும் மேலும் தகவலுக்கும்  newinnings.startupmission.in. என்கிற இணைய தளத்தை அணுகலாம்.