புதுதில்லி, செப்., 15- தில்லி முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப் பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியை ஒடுக்கவும், தில்லியில் ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கத்திலும் ஆம் ஆத்மி ஒருங்கி ணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபானக் கொள்கை வழக்கில் தொடர்பு இருப்ப தாக கூறி, கடந்த மார்ச் மாதம் 21 அன்று அமலாக்கத்துறை மூலம் கைது செய்து அவரை சிறையில் அடைத்தது மோடி அரசு. அதைத்தொடர்ந்து ஜூன் 26 அன்று அதே முறைகேடு குறித்து விசாரிப்பபதற்காக கெஜ்ரி வாலை சிபிஐயும் சிறையிலேயேகைது செய்தது. அமலாக்கத்துறை தொடர்ந்திருந்த வழக்கில் கடந்த ஜூலை 12 அன்று கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்திருந்தாலும், சிபிஐ கைது செய்ததன் காரணமாக, அவர் திகார் சிறையிலேயே இருந்து வந்தார். ஜாமீனில் விடுவிப்பு இந்நிலையில், சிபிஐ கைது செய்த ததை எதிர்த்து கெஜ்ரிவால் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு செப்டம்பர் 13 அன்றுக்கு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்திற்கு பின் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், வெள்ளியன்று இரவு அவர் சிறையில் விடுதலை செய்யப்பட்டார்.
மக்களைச் சந்திப்பேன்
ஜாமீனில் விடுதலையான பின்பு தில்லியில் ஞாயிறன்று காலை ஆம் ஆத்மி தொண்டர்கள் முன்பு கெஜ்ரிவால் உரையாற்றினார். அப்போது, “ஆங்கி லேயர் ஆட்சியை விட கொடூரமானது மோடி ஆட்சி. மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் ஆம் ஆத்மி மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப் பட்டுள்ளன. பகத்சிங் வீரமரணம் அடைந்த 95 ஆண்டுகளுக்குப் பின்னர் சுதந்திர இந்தியாவில் ஒரு மாநிலத்தின் முதல்வர் பாஜகவின் சதியால் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் நடந்தி ருக்கிறது. ஆகையால் மக்களிடம்தான் நாம் நீதி கேட்க வேண்டும். அதனால் நான் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளேன். செப்டம்பர் 17 அன்று பிரதமர் மோடியின் பிறந்த நாளில் என் பதவியை ராஜினாமா செய்கி றேன். மக்களைச் சந்தித்து அவர்களி டமே நீதியைக் கோருவோம். வீடு வீடாக சென்று மக்களிடம் நியாயம் கேட்கப் போகிறேன். மக்கள் புதிய தீர்ப்பு அளிக்கும் வரை இந்த முதல்வர் நாற்காலி யில் அமருவது இல்லை என முடிவு செய்துள்ளேன். தெருத் தெருவாக, வீடு வீடாக மக்களி டம் சென்று என்ன நடக்கிறது என்பதை விவரிக்க இருக்கிறேன். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி கட்சி மற்றும் ஆட்சி யை உடைப்பது, அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் மிரட்டுவது, பொய்வழக்கு போட்டு சிறையில் அடைப்பது, ஆட்சி யை தூக்கி எறிவது போன்றவைதான் பாஜகவின் அரசியல் பார்முலா. ஒன்றிய பாஜக அரசு, சிபிஐ மற்றும் அம லாக்கத்துறையை அரசியல் பழிவாங்கல் களுக்காக பயன்படுத்தி வருகிறது. பாஜக கனவு நிறைவேறாது ஆம் ஆத்மி கட்சியை அழிக்க திட்ட மிட்டு செயல்படுகிறது பாஜக. ஆம் ஆத்மி கட்சியை உடைக்க முடியாததால் என் தைரியத்தை தகர்க்க என்னை சிறைக்கு அனுப்பியது பாஜக. என்னை சிறைக்கு அனுப்பிவிட்டால் ஆம் ஆத்மி யை உடைத்து தில்லியில் ஆட்சி அமைத்துவிடலாம் என கனவு கண்டது பாஜக. ஆனால் ஆம் ஆத்மி கட்சி உடை யவும் இல்லை. பாஜகவின் கனவு நிறை வேறவும் இல்லை. சிறையில் இருந்த போது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய விரும்பவில்லை. நாட்டின் அரசி யல் சாசனத்தைப் பாதுகாக்கவே ராஜி னாமா செய்யாமல் இருந்தேன். ஒரு மாநில முதல்வரால் ஏன் சிறையில் இருந்து ஆட்சி நிர்வாகத்தை நடத்த முடியாது என ஒன்றிய அரசைப் பார்த்து கேள்வி கேட்டது உச்சநீதிமன்றம். சிறை யில் இருந்தபடியே ஒரு மாநில நிர்வா கத்தை நடத்த முடியும் என நிரூபித்து விட்டது உச்சநீதிமன்றம்” என அவர் கூறி னார்.
விரைவில் புதிய அமைச்சரவை?
தில்லி முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறி வித்துள்ள நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் புதிய முதல்வர் தலைமை யிலான அமைச்சரவை பதவியேற்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடக்க உள்ள தில்லி சட்டமன்ற தேர்தலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தயாராவார் என ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.