states

img

ஆர்எஸ்எஸ் முகாமில் பாலியல் வன்கொடுமை அனந்துவின் தற்கொலைக் குறிப்பில் உள்ள ‘என்எம்’ சிக்கினார்

ஆர்எஸ்எஸ் முகாமில் பாலியல் வன்கொடுமை அனந்துவின் தற்கொலைக் குறிப்பில் உள்ள ‘என்எம்’ சிக்கினார்  காவல்துறை  தீவிர விசாரணை

திருவனந்தபுரம் அனந்துவின் தற்கொலைக் குறிப்பில் குறிப்பிடப்பட்ட என்எம் ( NM) என்பவரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அனந்து அஜி (24) என்பவர் ஆர்எஸ்எஸ் முகாமில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக மரணக்குறிப்பில் தெரிவித்தார். சமூக ஊடகமான இன்ஸ்டாவில் அதை வெளியிட்ட பிறகு, அவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறைக்கு  முக்கிய தகவல்கள் கிடைத்துள் ளன. அனந்துவின் தற்கொலைக் குறிப்பில் குறிப்பிடப்பட்ட என்எம்  (NM) என்பவரை காவல்துறை யினர் அடையாளம் கண்டுள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை திருவனந்த புரத்தில் உள்ள தம்பானூர் காவல் துறையினர் விசாரித்து வருகின்ற னர். அனந்து சிறுவயதில் பயிற்சி பெற்ற ஆர்எஸ்எஸ் கிளை பற்றிய தகவல்களை சேகரித்துள் ளனர். குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலங்கள் அக்டோபர் 14 செவ்வாயன்று பதிவு செய்யப்பட்டன. தற்கொலைக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ‘என்எம்’ (NM) யாரென்று உறவி னர்களுக்குத் தெரியும். அனந்து வுக்கு சிகிச்சை அளித்த மருத்து வரின் வாக்குமூலம் புதனன்று பதிவு செய்யப்பட்டது. அனந்து, கோட்டயம் காஞ்சி ரப்பள்ளி அருகே உள்ள வஞ்சி மலையைச் சேர்ந்தவர். நான்கு வயதிலிருந்தே பாலியல் வன்கொ டுமைக்கு உள்ளானதாகவும், அது அவருக்கு மனநலப் பிரச்சனைக ளுக்கு வழிவகுத்ததாகவும் தற்கொ லைக் குறிப்பில் எழுதியிருந்தார். இந்த உலகில் எந்த அமைப்பை யும் தான் இவ்வளவு வெறுக்க வில்லை என்றும், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரை யாரும் தங்களது வாழ்க்கையில் ஒருபோதும் நண்ப ராக்கக் கூடாது என்றும், அவர்கள் விஷத்தன்மை கொண்டவர்கள் என்றும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது.