states

img

ஊழல்வாதிகளை பாதுகாப்பதே மோடி அரசின் ஒற்றைக் குறிக்கோள் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தாக்கு

288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நவம்பர் 20 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.  இந்நிலையில், அவுரங்காபாத் மாவட்டம் ஜிந்தூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலை வரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரு மான சரத் பவார் பேசுகையில், “மோடி அரசு தனது விவசாயிகளுக்கு எதிரான கொள்கை மூலம் சர்க்கரை ஏற்றுமதியை அனுமதிக்கக்கூடாது என்று முடிவு செய்துள்ளது. இந்த முடிவு மகாராஷ்டிரா விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். விவசாயிகளை பாதுகாக்க மற்றும் மோடி அரசின் தவறான கொள்கை யை எதிர்க்க வேண்டும் என்றால், நாம் அதிகாரத்தில் உள்ளவர்களை (பாஜக கூட்டணி) முதலில் தோற்கடிக்க வேண்டும் மகாராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. இதற்கு பத்லாபூர் பாலியல் வன்கொ டுமை (2 பள்ளி மாணவிகள் மீதான பாலி யல் வன்கொடுமை) உதாரணம் ஆகும். அதே போல மாநிலத்தில் பெண்கள் காணா மல் போகும் சம்பவமும் சர்வசாதாரண மாக அதிகரித்து வருகிறது. ஊழல்வாதிகளுக்கே ஆதரவு பாஜக தலைமையிலான மோடி  அரசு ஊழல்வாதிகளை பாதுகாப்ப தும், அதிகாரத்திற்காக ஊழல்வாதிகளு டன் கைகோர்ப்பது என்ற ஒற்றைக் குறிக் கோள்களுடன் மட்டுமே செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் அஜித் பவார் அணி யில் இருக்கும் சாகன் புஜ்பாலிடம் ஆளும் கூட்டணியில் ஏன் இணைந்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு சிறைக்கு செல்ல நான் விரும்பவில்லை. அதனால் தான் இணைந் தேன். புஜ்பால் எதிர்க்கட்சிகளாக செயல்பட அனுமதிக்கவில்லை எனக்  கூறுகிறார். இதன்மூலம் எதிர்க்கட்சி களுக்கு எதிராக அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவது தெளிவாகிறது” என அவர் குற்றம்சாட்டினார்.