தில்லியில் தொழிலாளர், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் தேசிய மாநாடு
கார்ப்பரேட் - வகுப்புவாத வலைத்தொடர்பை எதிர்ப்பதற்காக தொழிலாளர் - விவசாயிகள் ஒற்றுமையை வலுப்படுத்த இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு), அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் இணைந்து தில்லியில் உள்ள எச்.கே.எஸ்.சுர்ஜித் பவனில் “தொழிலாளர், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் தேசிய மாநாடு” நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற இந்த மாநாட்டில் விவசாயிகள் சங்க தலைவர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் விஜு கிருஷ்ணன், சிஐடியு தலைவர் ஹேமலதா, பொதுச் செயலாளர் தபன் சென், விவசாய தொழிலாளர்கள் சங்க தலைவர் ஏ.விஜயராகவன், பொதுச் செயலாளர் பி.வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். அதே போல நாடு முழுவதும் தொழிலாளர், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களும் மாநாட்டில் பங்கேற்றனர். குறிப்பாக மாநாட்டில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழு ஆதரவுடன் இஸ்ரேல், பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடத்தும் இன அழிப்பைக் கண்டித்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.