கேரள நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால்
இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக கேரளாவின் பாரம்பரியத் தொழில்களும், அவற்றின் ஏற்றுமதியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்றுமதி ஆண்டுக்கு ரூ.2,500 கோடி முதல் ரூ.4,500 கோடி வரை சரிய வாய்ப்பு உள்ளது.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்
மஹோபாவில் உள்ள ஒரே வீட்டில் 4000 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். சமாஜ்வாதி கட்சி மற்றும் பிற கட்சிகளின் முந்தைய புகார்கள் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாஜக தேர்தல் ஆணையத்தை தற்காலிக தீர்வு ஆணையமாக மாற்றியுள்ளது.
பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்
பாதுகாப்புத் துறையில் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான மிக முக்கிய காரணி ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்குவதாகும். இந்தியாவில் அதற்கான நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது. 2024 ஆம் ஆண்டின்படி அமெரிக்கா 131 பில்லியன் டாலர்களையும் சீனா 32 பில்லியன் டாலர்களையும், இந்தியா 5 பில்லியன் டாலர்களையும் ஒதுக்கீடு செய்துள்ளன.
சிபிஎம் எம்.பி., ஜான் பிரிட்டாஸ்
சைபர் பாதுகாப்பு மற்றும் தரவு திருட்டைத் தடுக்க வேண்டிய முக்கியமான நேரத்தில், எம்.பி.க்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ சன்சாத் மின்னஞ்சல் அமைப்பு பாஜகவிற்கு நெருக்கமான ஜோகோ என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.