states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

கேரளாவில் 4 நாட்களில் பருவமழை தொடங்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

 கேரளாவில் மே 27ஆம் தேதிக் குள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என கணிப்புகள் வெளியாகி இருந்தது. ஆனால் 4 நாட்க ளுக்கு முன்னதாகவே அங்கு தென் மேற்கு பருவமழை துவங்கிவிடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள் ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை யில்,”அடுத்த 4-5 நாட்களில் கேரளாவில் பருவமழை தொடங்குவதற்கு சாதக மான சூழ்நிலைகள் உருவாக வாய்ப்புள் ளது. தென்மேற்கு பருவமழை ஜூன் 1ஆம் தேதி கேரளாவில் தொடங்கி ஜூலை 8ஆம் தேதிக்குள் முழு நாட்டிலும் தென்மேற்கு பருவமழை ஆதிக்கம் செலுத்தும். செப்டம்பர் 17ஆம் தேதி வடமேற்கு இந்தி யாவிலிருந்து பின்வாங்கத் தொடங்கி அக்டோபர் 15ஆம் தேதிக்குள் தென்மேற்கு பருவமழை முழுமையாக பின்வாங்கி விடும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு 3 ஆண்டு வழக்கறிஞர் பணி அவசியம் உச்சநீதிமன்றம் உத்தரவு

சிவில் நீதிபதிகள் தேர்வு தகுதி தொடர்பான வழக்கில் ,“சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு ஆஜராக குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞ ராக பணியாற்றியிருக்க வேண்டும்” என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலை மை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ், நீதிபதி வினோத் சந்திரன் ஆகிய 3 பேர் கொண்ட அமர்வில் வழங்கிய தீர்ப்பில் கூறப் பட்டுள்ளதாவது,”முன்சீப், மாஜிஸ்தி ரேட் போன்ற நீதித்துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 3 ஆண்டு கள் வழக்கறிஞராக பணியாற்றியிருக்க வேண்டும். இது கட்டாய உத்தரவு ஆகும்.  இந்த தீர்ப்பு ஏற்கனவே தொடங்கி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நீதித்துறை பணியமர்த்தலுக்கு பொருந் தாது. அடுத்த முறை தொடங்கப்படும் நிய மன நடைமுறையில் இருந்து இந்த தீர்ப்பு பொருந்தும். அதாவது உயர்நீதிமன்றங் கள் ஏற்கெனவே ஜூனியர் பிரிவு சிவில் நீதிபதிகள் நியமன நடைமுறையைத் தொடங்கியுள்ளதால், தற்போதைய நிய மனத்துக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில் குறைந்தபட்ச நடைமுறைத் தேவை பொருந்தாது. அதேவேளையில், அடுத்த முறை தொ டங்கப்படும் நியமன நடைமுறையில் இருந்து இந்த தீர்ப்பு பொருந்தும்” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெளிவு படுத்தினர்.