states

img

ரூ.2 கோடி லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை

ரூ.2 கோடி லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை

3 பேர் கைது ; கேரள லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தீவிரம்

கேரள மாநிலம் கொட்டா ரக்கரயைச் சேர்ந்தவர் முந்திரி தொழிலதிபர் அனீஷ் பாபு. இவர் மீது பலகோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. அப்போது தொழில் அதிபர் அனீஷ் பாபுவிடம் இருந்து ரூ. 2 கோடி லஞ்சம் வாங்கியதை கேரள லஞ்ச ஒழிப்புத் துறை கண்டறிந்துள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையின் முக வர்கள் வில்சன் வர்கீஸ், ராஜஸ்தா னைச் சேர்ந்த முரளி முகேஷ், பட்டயக் கணக்காளர் ரஞ்சித் வாரியர் ஆகியோர் சமீபத்திய நாட்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அமலாக்கத்துறையின் உயர் அதிகாரிக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளனர். விசாரணைக்குப் பிறகு மேலும் நடவ டிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது. அமலாக்கத்துறை உயர் அதிகாரியும் விரைவில் விசா ரிக்கப்படுவார். இந்த லஞ்ச வழக்கில்  முதல் குற்றவாளியான அமலாக்கத் துறை உதவி இயக்குநர் சேகர் குமார் பணமோசடி வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்துள்ளார். கைது செய்யப்பட்ட பட்டய கணக்காளர் ரஞ்சித் வாரியருக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் பெரும் செல்வாக்கு இருந்தது. அவரு க்கு அலுவலகத்தில் இருந்து பல ரகசிய தகவல்கள் கிடைத்தன. பண பரி மாற்றங்களை நேரடியாகக் கட்டுப் படுத்தியவரும் அவரே. ஹவாலா மாதிரியில் பணம் மாற்றப்பட்டது. இதற்காக அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் இடைத்தரகர்களை நிய மித்ததும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், இந்த ஊழல் வழக்கில் ஒரு மூத்த அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டதால் ஏற் பட்டுள்ள களங்கத்தைப் போக்க அம லாக்கத்துறை, உள்விசாரணையையும் தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சி யாக, சில அதிகாரிகளை பாதுகாப்புக் காக வேறு மாநிலங்களுக்கு மாற்று வதற்கான நடவடிக்கையும் எடுக்கப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.