states

தீக்கதிர் விரைவு செய்திகள்

வெனிசுலா விவகாரம் அமெ. பெயரை கூறாமல்  மோடி அரசு மழுப்பல் அறிக்கை

இந்திய நேரப்படி சனியன்று முன்ன றிவிப்பு இல்லாமல் வெனிசுலா நாட்டின் முக்கிய நகரங்கள் மீது அமெரிக்கப் படைகளால் தாக்குதல் நடத்தி, அந்நாட்டின் ஜனாதிபதி நிக்கோ லஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிறைப்பிடிக்கப்பட்டு நியூயார்க் நகரில்  (அமெரிக்கா) அடைத்து வைக்கப்பட் டுள்ளனர்.  அமெரிக்காவின் இந்த அதிகாரமீற லுக்கு உலகின் பலநாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தியாவும் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “வெனிசுலாவில் அரங்கேறிவரும் சமீபத்  திய நிகழ்வுகள் ஆழ்ந்த கவலையளிக் கின்றன. வெனிசுலாவில் மாறிவரும் ஒவ்வொரு நிலையையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வெனிசுலா நாட்டு மக்களின் நல்வாழ்வு மற்றும் பாது காப்பிற்கான தனது ஆதரவை இந்தியா  மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அமைதி யான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனை களுக்குத் தீர்வு காணுமாறு சம்பந்தப் பட்ட அனைவரையும் நாங்கள் கேட்டுக்  கொள்கிறோம். இதன்மூலம் அப்பகுதி யில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முடியும். காரகாஸில் (வெனிசுலா தலைநகர்) உள்ள இந்தியத் தூதரகம் இந்தியச் சமூ கத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் உள்ளது. சாத்தியமான அனைத்து உதவி களையும் தொடர்ந்து வழங்கும்” என தெரி வித்துள்ளது. இந்த அறிக்கையில் வெனிசுலா மீது குண்டுவீசி, அந்நாட்டு ஜனாதிபதியை கைது செய்த அமெரிக்காவின் பெயரை மோடி அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிடவில்லை. நியூயார்க்

நியூயார்க் மேயர் மம்தானி கடும் கண்டனம்

வெனிசுலா நாட்டின் மீதான தாக்குதல் மற்றும் ஜனாதி பதி நிகோலஸ் மதுரோ  கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்கா வின் நியூயார்க் மேயர் மம்தானி (இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்) கடும் கண்ட னம் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக செய்தியாளர்  சந்திப்பில் அவர் கூறுகையில், “வெனி சுலா மீதான தாக்குதல் டொனால்ட் டிரம்பு டன் நேரடியாகப் பேசினேன். இது இறை யாண்மை கொண்ட நாட்டின் மீதான ஒரு தலைப்பட்சத் தாக்குதல் போர் நடவ டிக்கை ; இந்தச் செயலுக்கு எனது எதிர்ப்பைப் பதிவு செய்ய நான் டிரம்பை   அழைத்து அவரிடம் நேரடியாகப் பேசி னேன். எனது எதிர்ப்பைப் பதிவு செய்  தேன். அதைத் தெளிவாகத் தெரிவித் தேன். அரசு மாற்றத்திற்கான அப்பட்ட மான முயற்சி இது. இந்த நடவடிக்கை  மத்திய மற்றும் சர்வதேச சட்ட மீறலா கும். வெனிசுலா மக்களின் பாதுகாப்பி லும், ஒவ் வொரு நியூயார்க் நகரவாசி யின் பாதுகாப்பிலும்தான் எனது கவ னம் உள்ளது. எனது நிர்வாகம் இந்தச்  சூழ்நிலையைத் தொடர்ந்து கண்கா ணித்து, தொடர்ந்து வழிகாட்டுதல்களை வழங்கும்” என கண்டனம் தெரிவித் துள்ளார்.

அமித் ஷா தொகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த  102 பேருக்கு “டைபாய்டு”

பாஜக ஆளும் மத்தியப்பிர தேசத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 14 பேர் உயிரிழந்தனர். 2000க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்னர். இந்நிலையில், பாஜக ஆளும்  மற்றொரு மாநிலமான குஜராத்தின் காந்தி நகரில் கழிவுநீர் கலந்த குடி நீரை அருந்திய 102 பேருக்கு “டைபா ய்டு காய்ச்சல்” பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் உடல்நிலை மோசமடைந்த 37 பேர்  சிவில் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள்  மற்ற மருத்துவமனைகளில் சிகிச்சை  பெற்று வருகின்றனர். வடிகால் பழுது பார்க்கும் பணிகள் காரணமாக குடிநீர்  மாசுபட்டதே இந்த தொற்று நோய்க்குக் காரணம் என்று குடும்ப நலன் மற்றும் சுகாதாரத் துறையின் கூடுதல் இயக்குநர் டாக்டர் நீலம் படேல் தெரிவித்துள்ளார்.  காந்திநகர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொந்த மக்களவை தொகுதி என்பது குறிப்பி டத்தக்கது.