288 தொகுதிகளைக் கொண்ட மகா ராஷ்டிராவில் நவம் பர் 20 அன்று ஒரே கட்டமாக வாக் குப்பதிவு நடைபெற்றது. தொ டர்ந்து நவம்பர் 23 அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் ஆளும் மகாயுதி கூட்டணி 230 தொகுதிகளில் (பாஜக - 132, சிவசேனா (ஷிண்டே) - 57, தேசியவாத காங்கிரஸ் (அஜித்) - 41) வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி யைக் கைப்பற்றியது. சிறிய கட்சி களின் ஆதரவால் தற்போது மகா யுதி கூட்டணியின் மொத்த பலம் 237 ஆக அதிகரித்துள்ளது. எதிர்க் கட்சிகளின் மகா விகாஸ் அகாதி (எம்விஏ) கூட்டணி 50 தொகுதிக ளில் (சிவசேனா (உத்தவ்) - 20, காங்கிரஸ் - 16, தேசியவாத காங்கி ரஸ் (சரத்) - 10, சமாஜ்வாதி - 2, சிபிஎம் -1 , இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி - 1) மட்டுமே வெற்றி பெற்றது.
வலுக்கும் சந்தேகம்
சமீபத்தில் நிறைவுபெற்ற 18 ஆவது மக்களவை தேர்தலின் பொழுது மகாராஷ்டிரா மாநிலத் தில் மொத்தமுள்ள 48 தொகுதிக ளில் எதிர்க்கட்சிகளின் எம்விஏ கூட்டணி 30 தொகுதிகளிலும், மகா யுதி கூட்டணி வெறும் 18 தொகு திகளில் மட்டுமே வென்று இருந்தது ஆனால் வெறும் 4 மாத இடைவெளியில் நடைபெற்ற மகா ராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் மகாயுதி கூட்டணி 70% தொகு திகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சி யை கைப்பற்றி இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை. வாக்கு எண்ணிக்கை முடிவில் பல் வேறு சந்தேகம் உள்ளது என சிவசேனா (உத்தவ்), காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமை யான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றன.
95 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முடிவு சந்தேகம்
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்த லுக்கான வாக்காளர் தரவுகளின் ஆய்வின் மூலம் 95 தொகுதிகளில் வாக்குகள் எண்ணிக்கையும், வாக்குகள் பதிவும் பொருந்த வில்லை என “தி வயர்” நிறுவன செய்தித் தொகுப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ள தாவது: மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகளுக்கு நவம்பர் 20 அன்று வாக்குப்பதிவு நடை பெற்றது. தேர்தல் ஆணைய அறிக் கையின்படி 66.05% வாக்குகள் பதி வாகின. அதாவது மொத்தம் 6,40,88,195 வாக்குகள் (பெண் : 3,06,49,318, ஆண் : 3,34,37,057, மற்றவை - 1,820) பதிவாகியுள்ளன. தபால் வாக்குகளைச் (5,38,225) சேர்க்கும் போது மொத்த வாக்குக ளின் எண்ணிக்கை 6,46,26,420 ஆகும். ஆனால் 95 தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும், தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ள வாக்குகளுக்கும் அதிக மாறுபாடு இருப்பதால், பதிவான மொத்த வாக்குகள் எண்ணிக்கை 6,45,92,508 ஆக உள்ளது. அதாவது 33,912 வாக்குகள் குறைவு. 95 தொகுதி களில், 19 தொகுதிகளில் பதிவான வாக்குகளை விட அதிகமாகவும், 76 தொகுதிகளில் பதிவான வாக்கு களை விட குறைவாகவும் இருந் துள்ளன.
வாக்குகள் அதிகரிப்பும் மாயமும்
எடுத்துக்காட்டாக லோகா தொகுதியில் 2,26,837 இவிஎம் வாக்குகளுடன் 2,900 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தன. அங்கு மொத்த வாக்குகள் 2,29,737 ஆகும். ஆனால் 2,29,891 வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. லோகா தொகுதியில் வாக்காளர்கள் செலுத்திய வாக்குகளை விட 154 வாக்குகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் மாவல் சட்டமன்ற தொகுதியில் 2,012 வாக்குகள் மாய மாகியுள்ளன. மாவல் தொகுதி யில் 2,80,319 இவிஎம் வாக்குக ளுடன், 774 தபால் வாக்கு சேர்த்து 2,81,093 வாக்குகள் பதிவாகி இருந்தன. ஆனால் தேர்தல் ஆணையம் 2,79,081 வாக்குகளை மட்டுமே பதிவிட்டுள்ளது. கிட்டத்தட்ட 2,012 வாக்குகள் மாயமாகியுள்ளன. இதே போல நிப்பாத் தொகுதியில் 2,587 வாக்குகள் குறைத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு 95 தொகுதிகளில் பாஜக தலைமை யிலான மகாயுதி கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் மிகப்பெரிய மோசடியை நிகழ்த்தி யுள்ளது என வாக்காளர் தரவுகளின் ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது. 95 தொகுதிகளிலும் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் 95 தொகுதிகளிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் வாக்காளர் தரவுகளின் ஆய்வை சுட்டிக்காட்டி தேர்தலில் தோற்ற தனது கட்சி வேட்பாளர்களை சந்தித்து, வாக்கு இயந்திரம் மற்றும் விவிபேட் சீட்டு களை சரிபார்க்க கோரி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கு மாறு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.