மும்பை புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள சதாப்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளி ஒருவருக்கு தூய்மைப் பணியாளர்கள் இசிஜி எடுக்கும் காணொலி ஒன்று வெளி யானது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இசிஜி, எக்ஸ்ரே உள்ளிட்டவை எடுப்பதற்காக பிரத் யேக துறையில் படித்து பயிற்சி பெற்ற நபர்களே எடுக்க வேண்டும். ஆனால் மகா ராஷ்டிர மாநிலத்தை ஆளும் பாஜக கூட்டணி அரசு சுகாதாரத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை குறைந்த அளவிற்கு கூட நிரப்பவில்லை. பாஜக ஆட்சியில் பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் கைவிடப்பட்டுள்ளன. குறிப்பாக மாநில மற்றும் ஒன்றிய அரசுத் துறைகளில் உள்ள சேவைத் துறை களை பாஜக கைவிட்டுவிட்டது. இதனால் தான் மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் செய்யவேண்டிய பணிகளை சுகாதாரப் பணியாளர்கள் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அவர்கள் மருத்துவ மனைப் பணிகளில் வைத்து கசக்கிப் பிழியப்படுகின்றனர். இதற்கு அர சாங்கமே முழு பொறுப்பேற்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கண்டித்துள்ள னர். சதாப்தி மருத்துவமனையின் மூத்த மருத்துவர்களே மருத்துவத்துறையில் புதிதாக ஆட்சேர்ப்பு நடைபெறவில்லை என்று கூறுகின்றனர். இசிஜி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தொழில்நுட்ப உதவியாளர்களை பணியமர்த்துமாறு பலமுறை முறையிட்டு விட்டோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொழில்நுட்பம் போதுமான அளவு முன்னேறியுள்ளது. எனவே, சிறிய பயிற்சி யுடன் யார் வேண்டுமானாலும் அதனை இயக்க முடியும். எங்களிடம் உள்ள மனித வளங்களைக் கொண்டு முடிந்த வரை யில் வேலை செய்கிறோம். அனைத்து பிரிவுகளிலும் 35 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன என கருத்து தெரி வித்துள்ளனர்.