states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

தகுதி பெற்ற பட்டியல் சாதி, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை “பொருத்தமான தாக இல்லை (Not Found Suitable)” எனக் குறிப்பிட்டு நிராகரிப்பது, புது வகை “மநுதர்மம்” ஆகும். சமத்துவத்துக்கான பேராயுதம் கல்வி என்றார் அம்பேத்கர். ஆனால் அந்த ஆயுதத்தை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீர் அமைச்சரவைக் கூட்டம் பஹல்கா மில் நடைபெற்றது. ஏப்ரல் 22இல் நடந்த தாக்குத லுக்குப் பிறகு காஷ்மீர் மக்கள், குறிப்பாக பஹல்காம் மக்கள் வன்முறையை எதிர்த்து வெளிப்படுத்திய தைரியம், ஒற்றுமை மற்றும் உறுதியான நிலைப்பாட் டிற்கு நன்றி தெரிவிக்கவும், மரியாதை செலுத்தவும் இந்தக் கூட்டம் மூலம் நாங்கள் விரும்புகிறோம்.

பிஜு ஜனதாதள மூத்த தலைவர் சஞ்சய் குமார் தாஸ்

நிதின் கட்கரி முன்மொழிந்த கடலோர நெடுஞ்சாலை திட்டத்தின் அனைத்து டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒடிசா மக்கள் இந்த திட்டம் எப்போது நிறைவேறும் என கேள்வி எழுப்புகிறார்கள். பாஜக இரட்டை இயந்திர அரசு, என்ன தவறு நடந்தது என்பதையும், கடலோர நெடுஞ்சாலைக்கான எதிர்காலம் என்னவென்றும் தெளிவுபடுத்த வேண்டும்

மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் கேய்ஷாம்

மணிப்பூரின் அரசு போக்குவரத்து பேருந்துகளிலி ருந்து ஏன் “மணிப்பூர்” என்ற வார்த்தை நீக்கப் பட்டிருக்கிறது? மணிப்பூரை ஏற்கனவே பாஜகவின் “இரட்டை எஞ்சின்” அரசு இரு வருடங்களாக வஞ்சித் தது. இப்போது ஜனாதிபதி ஆட்சியும் மணிப்பூரை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும்.