states

10 நாட்களில் கெஜ்ரிவாலுக்கு வீடு ஒதுக்கப்படும்

10 நாட்களில் கெஜ்ரிவாலுக்கு வீடு ஒதுக்கப்படும்

தில்லி உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

புதுதில்லி 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தில்லியில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. ஆட்சியை இழந்த ஆம் ஆத்மி எதிர்க்கட்சியானது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்னும் ஒன்றிய அரசு வீடு ஒதுக்கவில்லை. தேர்தலுக்கு முன்பே, அதாவது அக்டோபர் 4, 2024 அன்று முதலமைச்சர் பதவியை கெஜ்ரி வால் ராஜினாமா செய்த போது பிளாக்ஸ்டாப் சாலையில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்தார். தற்போது மண்டி ஹவுஸுக்கு அருகிலுள்ள மற்றொரு கட்சி உறுப்பினரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கெஜ்ரிவால் தங்கியுள்ளார். வீடு ஒதுக்கக்கோரி கெஜ்ரிவால் பலமுறை கோரிக்கை விடுத்தும், ஒன்றிய அரசு உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் கெஜ்ரிவால் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொட ர்ந்தார். இந்த வழக்கு வியாழக்கிழமை அன்று நீதிபதி சச்சின் தத்தா அமர்வு முன்பு விசாரணை க்கு வந்தது. ஆம் ஆத்மி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா,“தில்லி முன் னாள் முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவாலு க்கு இன்னும் அரசு சார்பில் வீடு ஒதுக்கவில்லை.  இது ஏன் என்று தெரியவில்லை? அவர் ஒரு மாநில முன்னாள் முதலமைச்சர். அதனால் கடந்த காலங்களில் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட தங்குமிடத்திலிருந்து தரம் குறைந்ததாக இருக்கக் கூடாது” என வாதிட்டார். இதையடுத்து ஒன்றிய அரசின் வழக்கறி ஞரின் வாதத்தில் அதிருப்தி அடைந்த தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சச்சின்,“அரவிந்த் கெஜ்ரி வாலுக்கு தங்குமிடம் ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். ஒதுக் கப்பட்ட தங்குமிடத்தில் திருப்தி அடைய வில்லை என்றால், ஆம் ஆத்மி கட்சி மற்றும் கெஜ்ரிவால் அரசை அணுக சுதந்திரம் உண்டு” என அறிவுறுத்தினார். இதையடுத்து இறுதியாக,“10 நாள்களுக் குள் கெஜ்ரிவாலுக்கு பொருத்தமான தங்குமிடம் ஒதுக்கப்படும்”என்று ஒன்றிய அரசு தில்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.