சட்டமன்றத்தில் வறுத்தெடுக்கப்பட்ட “கல்கோட்டியாஸ்” ப
ல்கலை., பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் மாதா பிரசாத் பாண்டே எம்எல்ஏ பேசுகையில்,”லக்னோ பல்கலைக் கழகம் மிகக் குறைந்த கட்டணமே வசூ லிக்கிறது. ஆனால் கல்கோட்டியாஸ் (Galgotias) பல்கலைக்கழகத்தின் கட்ட ணத்தைப் போய் ஒருமுறை பாருங் கள்; பிரம்மாண்டமாக இருக்கும். என்னென்னமோ சிறப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால் எங்கி ருந்தோ ஒரு நாயை இழுத்துக்கொண்டு வந்து, அதைத் தாங்களே உருவாக்கி யதாகச் சொல்கிறார்கள். இதைப் பற்றி என்ன சொல்ல முடியும்?” என நையா ண்டியுடன் கேள்வி எழுப்பினார். அதா வது கட்டணம் நன்றாக வசூலிக்கிறார்கள், எதையும் உருவாக்காமல் விலைக்கு வாங்குகிறார்கள் என பிரசாத் பாண்டே கூறியுள்ளார்.