states

img

நீட் முறைகேடு: ஜேஎன்யு மாணவர்கள் போராட்டம்!

புதுதில்லி
ஒன்றிய அமைச்சருக்கு எதிராக ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம்

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளக் கோரியும், நீட் தேர்வை ரத்து செய்யக்  கோரியும் நாடு முழுவதும் இடதுசாரி மாணவ அமைப்புகளின் முன்னிலையில்  நடைபெற்று வரும் மாணவர்கள் போராட் டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜேஎன்யூ மாணவர்களும் நீட் தேர்வுக்கு  எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்தி யுள்ளனர்.

நாட்டிலேயே முதன்மையான கல்வி  நிறுவனமான தில்லி ஜந்தர் மந்தரில்  உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழ கத்தின் (ஜேஎன்யூ) நீட் தேர்வை ரத்து  செய்யக் கோரியும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும், நீட் தேர்வை நடத்  திய தேசிய தேர்வு முகமையை கலைக்கக்  கோரியும்  ஜேஎன்யூ மாணவ அமைப்பு கள் பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

புதுதில்லி
கெஜ்ரிவாலுக்கு  3 நாட்கள் சிபிஐ காவல்

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால் மதுபான கொள்கை வழக்கு  தொடர்பாக அமலாக்கத்துறை யால் கைது செய்யப்பட்டு தில்லி திகார்  சிறையில் உள்ள நிலையில், புதனன்று காலை அதே மதுபான கொள்கை வழக்கு  தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்  பும் (சிபிஐ) கைது செய்தது. கைது செய்த  பின் 5 நாட்கள் காவல் கோரி தில்லி ரோஸ்  அவென்யூ நீதிமன்றத்தில் சிபிஐ கெஜ்ரி வாலை ஆஜர்படுத்தியது. இந்நிலையில்,  ரோஸ் அவென்யூ நீதிமன்ற நீதிபதிகள் 3 நாட்கள் சிபிஐ காவல் அளித்து உத்தர விட்டனர்.

எங்களை 
நீங்கள் வழிநடத்துவீர்கள் 

“இரண்டாவது முறையாக சபாநாயகர் நாற்காலி யில் நீங்கள் அமர்ந்துள்ளீர்கள். உங்களை யும், மக்களவையும் வாழ்த்துகிறேன். சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளில் நடக்காத பணிகள், இந்த  அவையின் மூலமாக சாத்தியமாகி உள்ளது. இது  ஜனநாயகத்தின் நீண்ட பயணத்தில் பல மைல்  கற்கள் உள்ளன. 17ஆவது மக்களவையின் சாத னைகளால் பெருமிதம் கொள்கிறோம். உங்களது அனுபவத்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு எங்களை  நீங்கள் வழிநடத்துவீர்கள் என்று நம்புகிறோம்” என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

பாரபட்சமில்லாமல் இருப்பது மகத்தான பொறுப்பு

“எவ்வித பாகுபாடுமின்றி தாங்கள் அவை நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு உறுப்பினருக்கும் சமவாய்ப்பும், மரி யாதையும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். பார பட்சமில்லாமல் இருப்பதுதான் மகத்தான பொறுப்  பாக இருக்க முடியும். எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர் குரலையும் நசுக்க மாட்டீர்கள் என்று  எதிர்பார்க்கிறோம்” என வாழ்த்து தெரிவித்து சமாஜ்  வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேசினார்.

தாமரை தண்ணீரை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காது

“தாமரை நீரிலே இருந்தாலும், தன் மீது  தண்ணீரை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்  காது. அது போல் பாஜக எம்.பி.யாக தேர்ந்தெ டுக்கப்பட்டாலும் தற்போது அவையின் தலைவ ராகியிருக்கும் நீங்கள் (ஓம் பிர்லா) எல்லா கட்சி களையும் சமமாக நடத்த வேண்டும்” என திமுக  மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வாழ்த் துரை வழங்கினார்.

இடைநீக்கத்தை கனவில் கூட நினைக்க வேண்டாம் 

“கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் மிகச்சிறப்பாக பணியாற்றினீர்கள். ஆனால் எனது நண்பர் களான 150 எம்.பி.க்களை நீங்கள் தற்காலிக இடை நீக்கம் செய்த போது, உங்கள் மீது எங்களுக்கு வருத்தம் இருந்தது. இனிமேல் அவ்வாறு செய்ய  வேண்டாம். அடுத்த 5 ஆண்டுகளில் இடைநீக்கம்  செய்வது குறித்து கனவில் கூட நினைக்க வேண்  டாம். எப்போதும் நாங்கள் விவாதத்திற்கு தயாராக  உள்ளோம்” என தேசியவாத காங்கிரஸ் (சரத்)  எம்.பி. சுப்ரியா சுலே வாழ்த்துரையில் பேசினார்.

அரசியலமைப்புச் சட்டப்படி செயல்பட வேண்டும்

“இரண்டாவது முறையாக பதவியேற்ற சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு வாழ்த்துக் கள். ஆனால் அவருக்கு எதிராக ஒரு வேட்பாளர் களத்தில் இருந்தார் என்பது வரலாற்றில் குறிப்பி டப்படும். அதை பாஜகவுக்கு நினைவூட்ட விரும்பு கிறேன். அரசியலமைப்புச் சட்டப்படி ஓம் பிர்லா  செயல்பட வேண்டும்” என சிவசேனா (உத்தவ்) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி வாழ்த்து தெரி வித்தார்.