states

img

100-ஆவது ராக்கெட்டை ஏவி இஸ்ரோ வரலாற்றுச் சாதனை

சென்னை, ஜன. 29 - இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, ‘ஜிஎஸ்எல்வி எப்-15’ என்ற தமது 100-ஆவது ராக்கெட்டை புதனன்று (ஜன.29) வெற்றிகரமாக விண்ணில் ஏவி சாதனை படைத்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து காலை 6.23 மணிக்கு ஏவப்பட்ட இந்த ராக்கெட், ‘என்விஎஸ்-02’ என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணிற்கு எடுத்துச் சென்றது. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் நாரா யணன் கூறுகையில், “ஜிஎஸ்எல்வி எப்-15’  ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட என்விஎஸ்-02 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப் பட்டது. 100 ராக்கெட்டுகளை ஏவியதன் மூலம் 548 செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்தியுள்ளோம். 548 செயற்கைக்கோள்களில் 438 வெளி நாட்டு செயற்கைக்கோள்கள் ஆகும். 6 தலைமுறை ராக்கெட்டுகளை இதுவரை ஏவியுள்ளோம். சந்திரயான், ஆதித்யா போன்றவை இஸ்ரோவின் முக்கியமான சாதனைகள் என்றார்.