states

img

‘263 குழந்தைகளை கொன்ற இஸ்ரேல் ; மனசாட்சி இல்லாத உலகில் வாழ்கிறோம்’

‘263 குழந்தைகளை கொன்ற இஸ்ரேல் ; மனசாட்சி இல்லாத உலகில் வாழ்கிறோம்’

புதுதில்லி அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் ராணுவம் கடந்த 10 நாட்களாக ஈரான் மற்றும் லெபனான் மீதான தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது.  பிப்., 28 அன்று தெற்கு ஈரானின் மினாப் பகுதியில் உள்ள ‘ஷஜாரே தய்யீபே’ என்ற குழந்தைகள் படிக் கும் தொடக்கப்பள்ளி மீது அமெ ரிக்கா - இஸ்ரேல் நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 168 குழந்தை கள் உயிரிழந்தனர். குறிப்பாக ஈரானில் இதுவரை சுமார் 180 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ள தாக யுனிசெப் (உலக சுகாதார அமைப்பு) தெரிவித்துள்ளது. அதே  போல் மார்ச் 2ஆம் தேதி முதல் லெபனான் முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 83 குழந்தைகள் உட்பட மொத்தம் 394 பேர் கொல் லப்பட்டுள்ளனர். லெபனானில் மட்டும் கடந்த சில நாட்களில் சுமார் 18,000 குழந்தைகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாது காப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இந்த தாக்குதலை கண்டித்து மனசாட்சி இல்லாத உலகில் வாழ்கி றோம் என மூத்த பத்திரிகையாளர் ராணா அய்யூப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும் கூறுகையில்,”ஒரே வாரத்தில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஈரானில் தோராயமாக 170 குழந்தைகளும், லெபனா னில் 83 குழந்தைகளும் கொல்லப் பட்டுள்ளனர். பிஞ்சு குழந்தைகளின் இரத்தம் மற்றும் தலை துண்டிக்கப் பட்ட அவர்களின் உடல்கள் நம் மனசாட்சியைச் சற்றும் உலுக்காத ஒரு உலகத்தைக் கற்பனை செய்து  பாருங்கள். ஆனால் இஸ்ரேல் - அமெரிக்காவின் இந்த கொடூரக் கொலைக்கான காரணங்களைப் பற்றி நாம் இன்னும் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்” என அவர் குற்றம்சாட்டினார்.