கேரள மாநிலத்தை பொருளாதார ரீதியாக ஒதுக்கி வரும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து “இந்தியாவில் கேரளா இல்லையா?” என்ற முழக்கத்துடன் புதன்கிழமை அன்று ஆளுநர் மாளிகை மற்றும் மாவட்ட மையங்களில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருவனந்தபுரம் ஆளுநர் மாளிகை முன் நடைபெற்ற போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் மாஸ்டர் துவக்கி வைத்து உரையாற்றினார். அதே போல கோழிக்கோடு வருமான வரித்துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஏ.விஜயராகவன் தலைமை தாங்கி உரையாற்றினார். மத்தியக் குழு உறுப்பினர்கள் இ.பி.ஜெயராஜன், எளமரம் கரீம், ஏ.கே.பாலன், பி.கே.ஸ்ரீமதி,கே.கே.ஷைலஜா, சி.எஸ்.சுஜாதா ஆகியோர் முறையே கண்ணூர், மலப்புரம், பாலக்காடு, காசர்கோடு, திருச்சூர், இடுக்கி ஆகிய இடங்களில் போராட்டங்களுக்கு தலைமை தாங்கினர்.