states

மெய்டெய் தீவிரவாத ஆயுதக் குழுவுடன் ஆளுநர் அஜய் பல்லா சந்திப்பு

மெய்டெய் தீவிரவாத ஆயுதக் குழுவுடன் ஆளுநர் அஜய் பல்லா சந்திப்பு

பாஜகவின் வகுப்புவாத அரசியல் காரணமாக வடகிழக்கு மாநி லங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் முதல் வன்முறை பூமியாக காட்சி அளித்து வருகிறது. மெய்டெய் - குக்கி (பழங்குடி) இனக் குழுக்களுக்கு இடையேயான மோதலே 22 மாதங்களாக வன்முறையாக நீடித்து வருகிறது. இந்த வன்முறையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐ நெருங்கியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

அமித் ஷாவுக்கு நெருக்கமானவர்

இந்நிலையில், மணிப்பூரில் வன்முறை தூண்டியவர், 22 மாதங்களாக வன்முறையை நீடிக்க வைத்தவர் என்ற குற்றச்சாட்டுடன் முத லமைச்சர் பைரேன் சிங், தனது பதவியை ராஜி னாமா செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட் டது. ஆயினும் புதிய முதல்வரை பாஜக தேர்வு  செய்ய முடியாததால் மணிப்பூரில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மிக நெருக்கமான அஜய் பல்லா வின் (மணிப்பூர் ஆளுநர்) கட்டுப்பாட்டில் தற்போது மணிப்பூர் மாநிலம் உள்ளது. அதன் பின்பு, தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பெயரில் குக்கி பழங்குடி மக்களை கைது செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக பழங்குடி மக்கள் அதிகமாக வசிக்கும் மலை மாவட்டங்கள் ஊரடங்கு விதிக்கப்பட்ட பகுதி போன்று காட்சி அளிக்கிறது. பாஜக ஆதரவு பெற்ற மெய்டெய் மக்களுக்காகவே பழங்குடி மக்களை ஒடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளதால், கடந்த 2 வார காலமாக மணிப்பூரில் பதற்றமான சூழலே நிலவு வருகிறது.

தீவிரவாத குழுவை சந்தித்த ஆளுநர்

இந்நிலையில், மணிப்பூர் ஆளுநர் அஜய் பல்லா மெய்டெய் ஆயுதக் குழு அமைப்பான அரம்பாய் தெங்கோலை சந்தித்தது கடும்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க் கிழமை அன்று இரவு இம்பாலில் அரம்பாய் தெங்கோல் அமைப்பின் முக்கிய தலைவர் களை சந்தித்த அஜய் பல்லா,”கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாநிலத்தின் அமைதியையும் இயல்புநிலையையும் மீட்டெடுப்பதில் தங்களது (அரம்பாய் தெங்கோலின்) ஒத்துழைப்பு மிக முக்கியம்” எனக் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குக்கி - கோஹூர் கடும் கண்டனம்

மெய்டெய் ஆயுதக் குழுவுடன் ஆளுநர் அஜய் பல்லா சந்திப்பு நடத்தியதற்கு குக்கி  மனித உரிமைகள் அமைப்பான கோஹூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,”அரம்பாய் தெங்கோல் என்ற ஆயுதமேந்திய தீவிரவாதக் குழுவே மணிப்பூர் வன்முறைக்கு காரணம் ஆகும். மாநிலத்தில் வன்முறை இத்தனை மாதங்கள் நீடிப்பதற்கும் அரம்பாய் தெங்கோல் தீவிரவாதக் குழுவின் தாக்குதலே காரணம் ஆகும். இத்தகைய சூழலில் அரம்பாய் தெங்கோலின் தலைவர்களான கொரோங்கன்பா குமான் மற்றும் ராபின் மங்காங் ஆகியோருடன் சந்திப்பு நடத்தி யதற்காக மணிப்பூர் ஆளுநர் அஜய் பல்லாவை  கோஹூர் வன்மையாகக் கண்டிக்கிறது. இது மாநிலத்தின் அமைதிக்கு நல்லதல்ல” என அதில் கூறப்பட்டுள்ளது. மெய்டெய் ஆயுதக் குழுவுடன் ஆளுநர் அஜய் பல்லா சந்திப்பு நடத்தியதால் மணிப்பூரில் உச்சக்கட்ட பதற்றம் நீடித்து வருகிறது. குறிப்பாக மலை மாவட்டங்களில் அமைதியற்ற சூழல் நிலவுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.